குழந்தை பெற்று நாக சைதன்யாவுடன் செட்டில் ஆக விரும்பினார்.. சமந்தா பற்றி சீக்ரெட் சொன்ன பிரபலம்

சென்னை: நடிகை சமந்தா நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சில வருடங்கள் சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை திடீரென பிரிவில் முடிந்தது. இதனையடுத்து சமந்தா தன்னுடைய கரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். ஆனால் திடீரென்று அவருக்கு மையோசிடிஸ் நோய் வந்து அதிலிருந்து மீண்டார். இந்தச் சூழலில் அவரது முன்னாள் கணவர் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்யவிருக்கிறார்.

முன்னணி நடிகையான சமந்தா தெலுங்கில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ரீமேக்கில் நடித்தபோது நாக சைதன்யாவை காதலித்தார். இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் அவர்களது திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நடிப்பில் தீவிரம் காட்டி வந்தார் சமந்தா. ஆனால் திடீரென கடந்த 2021ஆம் ஆண்டு நாங்கள் இருவரும் பிரிகிறோம் என்று நாக சைதன்யாவும், சமந்தாவும் சமூக வலைதளத்தில் அறிவித்தனர். அதற்கான காரணங்களாக பல யூகங்கள் சொல்லப்படுகின்றன.

Samantha Naga Chaitanya Neelima

பிஸியான சமந்தா: திருமண முறிவுக்கு பிறகு தனது கரியரில் தீவிர கவனம் செலுத்திவந்தார் சமந்தா. அந்தவகையில் தமிழில் அவர் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்தார். மேலும் தெலுங்கில் வெளியான புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார். அந்தப் பாடலில் நடனம் ஆடிய பிறகு அவருக்கென்று ரசிகர் கூட்டம் பெருக ஆரம்பித்தது. மேலும் ஹாலிவுட் படம் ஒன்றிலும் நடிப்பதற்கு கமிட்டானார் சமந்தா.

மையோசிடிஸ்: சமந்தாவின் கரியர் கிராஃப் உச்சம் சென்றுகொண்டிருந்தபோது அவருக்கு மையோசிடிஸ் என்னும் நோய் வந்தது. அரிய வகை நோயான அதிலிருந்து மீள்வதற்கு சிகிச்சை எடுத்த சமந்தா ஒருவழியாக அந்த நோயிலிருந்து வெளியே வந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் தனது இரண்டாவது இன்னிங்ஸில் அவர் நடித்த சாகுந்தலம், குஷி ஆகிய இரண்டு படங்களுமே தோல்வியை சந்தித்தன. சூழல் இப்படி இருக்க சினிமாவிலிருந்து குட்டி பிரேக் எடுப்பதாக கூறி வாங்கிய அட்வான்ஸை திருப்பி கொடுத்தார்.

சிட்டாடல் வெப் சீரிஸ்: அதேசமயம் சிட்டாடல் வெப் சீரிஸின் இந்திய வெர்ஷனில் நடிக்க கமிட்டானார். ஃபேமிலி மேன் வெப் சீரிஸை இயக்கிய ராஜ் & டிகே இயக்கும் அந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்துவருகிறது. அதில் சமந்தாவும் கலந்துகொண்டிருக்கிறார். இது தவிர மேலும் சில படங்களில் அவர் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கியிருப்பதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளியாகிக்கொண்டிருந்தன. விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்.

நாக சைதன்யா நிச்சயதார்த்தம்: இந்தச் சூழலில் சில நாட்களுக்கு முன்பு சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவுக்கும், நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. ஒருபக்கம் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவர; மறுபக்கமோ சமந்தா விரைவில் இன்னொரு திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கோரிக்கையையும் ரசிகர்கள் வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

தயாரிப்பாளர் பேட்டி: இந்நிலையில் சாகுந்தலம் படத்தின் தயாரிப்பாளர் நீலிமா சமந்தா குறித்து அளித்த ஒரு பேட்டியில், "சாகுந்தலம் படத்தின் கதையை பற்றி பேசுவதற்காக சில வருடங்களுக்கு முன்பு சமந்தாவை சந்தித்தேன். அவருக்கு கதை பிடித்து நடிக்க ஒத்துக்கொண்டார். அப்போது என்னிடம், ஜூலை முதல் ஆகஸ்ட் மாதத்திற்குள் திரைப்பட பணிகளை முடிக்குமாறும்; அதற்கு பிறகு குழந்தையை பெற்றுக்கொண்டு கணவரோடு செட்டில் ஆகி நேரத்தை செலவழிக்க விரும்புவதாக சொன்னார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X