நீளிரா படத்தில் ஒரு மைனஸும் இல்லை.. ப்ளூ சட்டை மாறன் விமர்சனத்தில் கொண்டாடி தீர்த்துட்டாரு.. செம சர்ப்ரைஸாம்

சென்னை: சுமித்ரன் என்பவர் இயக்கியிருக்கும் நீளிரா திரைப்படத்தில் நவீன் சந்திரா, ரூபா கொடுவாயூர் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படமானது இன்று ரிலீஸாகியிருக்கிறது. ஈழத்தில் நடக்கும் கதைக்களத்தை இயக்குநர் கையில் எடுத்திருக்கிறார். படத்தின் ட்ரெய்லருக்கெல்லாம் நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் நீளிரா படம் பற்றி விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார். அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

சுமித்ரன் இயக்கத்தில் நவீன் சந்திரா, ரூபா,கபிலா வேணு உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் நீளிரா. சுமித்ரன் என்பவர் இயக்க தபஸ் நாயக் இசையமைத்திருக்கிறார். ஈழத்தி நடக்கும் பிரச்னை ஒன்றை மையமாக வைத்து இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்கு ரிலீஸுக்கு முன்பே திரைத்துறையில் நல்ல கவனத்தை ஈர்த்தது. வெற்றிமாறன் உள்ளிட்டோர் எல்லாம் படத்தை வெகுவாக பாரட்டியிருந்தார்கள். இந்நிலையில் படமானது இன்று ரிலீஸாகியுள்ளது.

Neelira Movie Review Blue Sattai Maran Praises Naveen Chandra s Film
Photo Credit:

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: படம் பற்றி ப்ளூ சட்டை மாறன் தனது யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில், "பத்திரிகையாளர் காட்சியில்தான் படத்தை பார்த்தோம். ஆரம்பிப்பதற்கு முன்னதாக இயக்குநர், படத்தை பார்த்துவிட்டு உங்கள் விமர்சனத்தை வையுங்கள். ஆனால் க்ளைமேக்ஸை மட்டும் சொல்லிவிடாதீர்கள் என கோரிக்கை வைத்தார். ஆனால் படம் பார்த்து முடித்த பிறகுதான் தெரிகிறது இந்தப் படத்தில் எந்த சீனையும் சொல்லிவிடக்கூடாது என்று. அந்த அளவுக்கு ஒவ்வொரு சீனுக்குள்ளும் சர்ப்ரைஸ் இருந்தது. அந்த அளவுக்கு அவர்கள் மேக்கிங் இருந்தது. எந்தக் கதையை வேண்டுமானாலும் ஈஸியாக எழுதிவிடலாம்.

நேரில் பார்ப்பது மாதிரியே: ஆனால் அதை பிரமாதமாக படமாக்கியிருந்தார்கள். இதை பார்ப்பதற்கு முன்னதாக சில விஷயங்களை தெரிந்துகொண்டு படம் பாருங்கள். எதற்காக இலங்கையில் தமிழர்கள் தனி தமிழீழம் வேண்டும் என போராட ஆரம்பித்தார்கள். எப்படி போராட்ட குழுக்கள் தோன்றி. போராட்ட குழுக்களில் விடுதலை புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே பிரச்னை என்ன? அதில் இந்தியா தலையிட்டு ஐபிகேஎஃப்பை அனுப்பியது என்பதையெல்லாம் தெரிந்துகொண்டு படத்தை பார்த்தால் நீங்கள் நேரில் பார்ப்பது மாதிரியே இருக்கும்.

Also Read
ஹீரோ விஜய்யை செமயாக கலாய்த்த TN 2026.. விஜய் பார்த்தால் என்ன சொல்வார்?.. நட்டி நட்ராஜ் ஓபன் டாக்
ஹீரோ விஜய்யை செமயாக கலாய்த்த TN 2026.. விஜய் பார்த்தால் என்ன சொல்வார்?.. நட்டி நட்ராஜ் ஓபன் டாக்

அதனால்தான் தெரிந்துகொள்ள வேண்டும்: இந்தப் படத்தை பார்த்துவிட்டு ஒரு நண்பர் என்னிடம், இலங்கை ராணுவத்தில் இருப்பவர்களுக்கு ஹிந்தி தெரியுமா என கேட்டார். ஏனெனில் ஐபிகேஎஃப் ராணுவத்தை அவர் இலங்கை ராணுவம் என புரிந்துகொண்டார். அதனால்தான் சில விஷயங்களை தெரிந்துகொண்டு இந்தப் படத்தை பார்க்க வேண்டும். மொத்தத்தில் இந்தப் படம், இதுவரை ஈழ பிரச்னையில் பல விஷயங்களை பேசியிருந்தாலும் ஒரு குறிப்பிட்ட பிரச்னையை திருமண வீட்டு பிரச்னையாக எடுத்துக்கொண்டு சொல்லியிருக்கிறார்கள்.

ஒரு மைனஸ் கூட இல்லை: அதை அவர்கள் படமாக்கியிருக்கும் விதமும் ரொம்ப பிரமாதமாக இருக்கிறது. இதுதொடர்பாக டீட்டெயில் தெரியாதவர்கள் பார்த்தாலும் நல்ல ஆக்ஷன் த்ரில்லர் படத்தை பார்த்தது மாதிரி இருக்கும்" என்றார். ப்ளூ சட்டை மாறன் தான் விமர்சிக்கும் படங்களில் 98 விழுக்காடு மைனஸ்களை அடுக்கிவிடுவார். கலாய்த்தும்விடுவார். ஆனால் இந்தப் படம் பற்றிய விமர்சனத்தில் அவர் ஒரு மைனஸை கூட சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X