கணவர் எப்போதும் போனில் பிசி.. கடுப்பில் அந்த மொழியை கற்றுக்கொண்ட 'சோளி கே பீச்சே கியா ஹை' நடிகை!
மும்பை: கணவர் எப்போதும் போனில் இருப்பதால், தான் சைகை மொழியை கற்றுக் கொண்டதாக பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.
Recommended Video
எண்பதுகளில், முன்னணி இந்தி நடிகையாக இருந்தவர் நீனா குப்தா. ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
இவர் பிரபல வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸை காதலித்து, திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்தார். இவர்களுக்கு மஸாபா குப்தா என்ற மகள் இருக்கிறார்.

சோளி கே பீச்சே
பின்னர் டெல்லியை சேர்ந்த விவேக் மெஹ்ராவை திருமணம் செய்துகொண்ட நீனா, இப்போதும் இந்தி படங்களில் நடித்து வருகிறார். சஞ்சய் தத்தின் 'கல்நாயக்' படத்தில் வரும் 'சோளி கே பீச்சே கியா ஹே' பாடல் மூலம் இன்னும் பிரபலமானவர் நீனா குப்தா. இவர் இப்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்த லாக்டவுனில் சைகை மொழியை கற்றுக்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.

சைகை மொழி
அவர் அதில் கூறியிருப்பதாவது: 'இந்த லாக்டவுனில் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொண்டேன். அது சைகை மொழி. என் கணவர் எப்போதும் போனில் நேரத்தைச் செலவழிக்கிறார். காலையில் எழுந்ததில் இருந்து தனது 90 சதவிகித நேரத்தை போனில்தான் செலவழிக்கிறார். அதனால் அவரிடம் சைகை மொழியிலேயே பேசிவருகிறேன். சாப்பிட, அழைக்க, ஏதும் கேட்பதற்கு அந்த மொழியையே பயன்படுத்துகிறேன்.

நடிகை அனுஷ்கா சர்மா
இந்த லாக்டவுன் எனக்கு இந்த மொழியை கற்றுக் கொடுத்திருக்கிறது' என்று சிரித்துக்கொண்டே கிண்டலாகக் கூறியுள்ளார். இந்த வீடியோவை ஷூட் செய்தது அவர் கணவர்தான். இதை லைக் செய்துள்ள நடிகை அனுஷ்கா சர்மா, அவரை பாராட்டியுள்ளார். இன்னொருவர், பெரும்பாலான கணவர்கள் போனிலேயே இருப்பதால, அதிகமான பெண்கள் இந்த மொழிக்கு பழகிவிட்டார்கள் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தவிர்க்க முடியவில்லை
உங்க வீட்டுல மட்டும் இல்லை, எங்க வீட்டுலயும் அப்படித்தான் என்று ரசிகைகள் சிலர் தெரிவித்துள்ளனர். நீங்க இதை சொல்லும் விதம் இனிமையாக இருக்கிறது. சமீபகாலமாக உங்கள் பதிவுகளை தொடர்கிறேன். சிறப்பான விஷயங்களை சொல்கிறீர்கள் என்று தெரிவித்துள்ளார் ஒருவர். இன்னொருவர், வீட்டுல இருந்து வேலை பார்க்கத் தொடங்கிய பிறகு சைகை மொழி தவிர்க்க முடியாததா போச்சு' என்று கூறியிருக்கிறார் இன்னொரு ரசிகர்!


Click it and Unblock the Notifications











