twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரொம்ப காலமா பாய்பிரெண்ட் இல்லாம தனிமையை ஃபீல் பண்ணினேன்... கஷ்டமா இருந்துச்சு

    |

    மும்பை : பாலிவுட் நடிகை நீனா குப்தா சமீபத்தில் வெளியான சர்தார் கா கிராண்ட்சன் படத்தில் அர்ஜூன் கபூருடன் நடித்துள்ளார்.

    இந்நிலையில் தான் நீண்ட காலமாக கணவர் மற்றும் பாய்பிரண்ட் இல்லாமல் தனிமையில் இருந்ததாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

    பாபநாசம் பாப்பாவா இது.. ஹீரோயின் மெட்டீரியல் ஆயிட்டாங்கய்யா.. டீப் ஓபன் கவுனில் தாராளம்!பாபநாசம் பாப்பாவா இது.. ஹீரோயின் மெட்டீரியல் ஆயிட்டாங்கய்யா.. டீப் ஓபன் கவுனில் தாராளம்!

    அவர் விவேக் மெஹ்ரா என்பவரை திருமணம் செய்து அவருடன் தன்னுடைய முக்தேஷ்வர் விடுமுறை வீட்டில் தற்போது வசித்து வருகிறார்.

    முக்கிய படங்களில் நடித்தவர்

    முக்கிய படங்களில் நடித்தவர்

    பாலிவுட் நடிகை நீனா குப்தா முக்கியமான பல்வேறு படங்களில் நடித்து புகழ்பெற்றவர். இவர் மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ்சுடன் இணைந்து வாழ்ந்த நிலையில், மசாபா குப்தா என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

    பாய்பிரெண்ட் இல்லை

    பாய்பிரெண்ட் இல்லை

    இந்நிலையில் தான் நீண்ட காலங்கள் தனிமையில் வாழ்ந்ததாக தெரிவித்துள்ளார். தனக்கு கணவரோ பாய்பிரெண்டோ இல்லாத நிலையில் இந்த தனிமையை தான் அனுபவித்ததாகவும் ஆனால் அதிலிருந்து வெளிவர தான் அதிரடி முடிவுகளை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    வலிமையை தந்த கடவுள்

    வலிமையை தந்த கடவுள்

    தன்னுடைய தந்தை தனக்கு மிகச்சிறந்த பாய்பிரெண்டாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தான் அடிக்கடி தனிமையை உணர்ந்த போதிலும், அதிலிருந்து வெளிவருவதற்கான வலிமையை கடவுள் தனக்கு தொடர்ந்து தந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    புரிந்து கொள்ள சந்தர்ப்பம்

    புரிந்து கொள்ள சந்தர்ப்பம்

    இதனிடையே, விவேக் மெஹ்ரா என்பவரை மணமுடித்த நீனா குப்தா, அவருடன் முக்தேஸ்வர் விடுமுறை ஹோமில் இந்த லாக்டவுன் காலத்தில் வசித்து வருவதாக தெரிவித்துள்ளார். தானும் விவேக்கும் டெல்லியிலும் மும்பையிலும் வசித்துவந்த நிலையில் தற்போது சேர்ந்து இருப்பது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    சிறப்பான விமர்சனம்

    சிறப்பான விமர்சனம்

    தொடர்ந்து பாலிவுட் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் நீனா குப்தா. சமீபத்தில் இவரது நடிப்பில் சர்தார் கா கிராண்ட்சன் திரைப்படம் வெளிவந்துள்ளது. அர்ஜூன் கபூர் லீட் ரோலில் நடித்துள்ள இந்த படத்தில் நீனா குப்தாவின் நடிப்பு சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது.

    English summary
    The actress said that she was able to overcome her loneliness
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X