For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நீங்க நல்லவரா.. இல்லை கெட்டவரா... இப்போ டிரண்டே இதுதான் பாஸ்...!

  By Soundharya
  |

  தமிழில் பல திரைப்படங்கள் வந்திருக்கலாம். எல்லா திரைப்படத்திலும் நாயகர்கள் முதற்கொண்டு அத்தனை பேரும் பக்கம் பக்கமாக வசனமும் பேசியிருக்கலாம். ஆனால் எல்லா வசனங்களும் பிரபலமாவதில்லை. ஆனால், ஒரு சில வசனங்கள் பிரபலமாவது மட்டுமில்லாமல், பல வருடங்கள் ஆனாலும் மறக்க முடியாத சிறப்பிடத்தைப் பெற்று திகழ்கின்றன.

  அத்தகைய வசனங்கள் புரட்சி வசனங்களாக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. குட்டி குட்டி பன்ச் வசனங்களாகவும் இருக்கலாம்.. முக்கியமானது, மக்கள் மத்தியில் சென்று சேர்ந்தாலே போதும். பல நேரங்களில் நடிகர், நடிகையர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு முகத்தை அசைத்து, வாயை வளைத்து, உடலை நெளித்து, கண்ணீரைக் கொட்டி பேசப்படும் வசனங்கள் கூட தற்போது காமெடி பீசுக்காக பயன்படும் நிலையும் நிறையவே இருக்கிறது.

  தமிழ் முன்னணி நடிகர்களின் வசனங்கள் மட்டும் அதற்கு விதிவிலக்கா..என்ன? சில சூப்பர் நடிகர்கள் பேசிய வசனங்களும் அதை எப்படியெல்லாம் காமெடிக்காக உல்டா செய்தார்கள் என்ற விவரமும் இதோ..

  நாயகன் 1987:

  நாயகன் 1987:

  நீங்க நல்லவரா? கெட்டவரா?, அவங்கள நிறுத்த சொல்லு நா நிறுத்துறேன்..!, நாலு பேருக்கு நல்லதுனா, எதுமே தப்பில்லை.

  இதுபோன்ற வார்த்தைகளும் வசனங்களும் இன்றும் பல இடங்களில் பேசப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணமே உலக நாயகன் நடித்த நாயகன் திரைப்படம் தான். இப்படம் 80'களில் இல்லை இப்போது வெளியானால் கூட வெற்றி நிச்சயம். இந்த வசனத்தை ஜாலிக்காக பல இடங்களில் பலரும் உபயோகித்து வருகிறார்கள்.. இன்று வரை.

  தளபதி 1991:

  தளபதி 1991:

  என் மேல சந்தேகப்படுறியா..? நட்புனா என்னனு தெரியுமா? உனக்கு. நண்பன்னா என்னனு தெரியுமா உனக்கு ? சூர்யானா என்னனு தெரியுமா உனக்கு ? உன் கிட்ட முன்னாடியே சொல்லிருக்கேன் என் உயிர் குடுப்பேன்னு, எடுத்துக்கோ

  இந்த வசனத்த யாரும் மறக்க முடியாது. நண்பேன்டா என்று காட்டிக் கொள்வதற்காக இதையும் மக்கள் போட்டுத் தாளித்து எடுத்து வருகின்றனர். 1991லேயே கர்ணன் படத்தை ரீமேக் பண்ணி எடுத்த படம் இது. இப்போ இந்த வசனம் நண்பர்களுக்குள் எதார்த்தமாக போய்விட்டது.

  பாட்ஷா 1995:

  பாட்ஷா 1995:

  சார், என் பேரு பாட்ஷா. எனக்கு இன்னொரு பேரு இருக்கு..., நா ஒரு தடவ சொன்னா அது நூறு தடவ சொன்ன மாதிரி.

  டப்ஸ்மாஷ் வருவதற்கு முன்பே பல பேர் பேனாவைத் தூக்கி வாயில் போட்டுப் பிடித்து இந்த வசனத்தைச் சொல்லிக் கலக்கியுள்ளனர்.

  நரசிம்மா 2001:

  நரசிம்மா 2001:

  சாதாரண மனுஷனுக்குதா கரண்ட்டு தொட்டா ஷாக் அடிக்கும். என்ன தொட்டா கரன்ட்டுக்கே ஷாக் அடிக்கும்.

  கேப்டனோட கேட்டதும் கிலி ஏற்படுத்தும் அவ்ளோ கோவமான வசனம். இதுமட்டும் இல்ல அவரோட எல்லா பஞ்ச் டயாலக்கும் இப்போ காமெடி டயலாக்கா பரவிகிட்டு இருக்கு. கேப்டன் வசனத்திற்கு எப்போவுமே மவுசு குறையாது... அதை வைத்து மக்கள் செய்யும் ரவுசும் குறையாது.

  அந்நியன் 2005:

  அந்நியன் 2005:

  அஞ்சு ரூபா திருடுனா தப்பா..?

  இது மட்டும் இல்ல, இப்படத்தில் வரும் பல்வேறு வசனங்கள் தற்போது பிரபலமாக அனைவரும் பேசப்படுவது. அதிலும், அந்நியன் மற்றும் அம்பி என மாறிமாறி நடிக்கும் நடிப்பு இருக்கே.. ப்ப்பாபா. இப்படத்தில் வரும் ஒவ்வொரு வசனங்களும் தற்போதைய ட்ரண்டாக வலம் வருகிறது. அட லேட்டஸ்டாக நீதிபதி குமாரசாமி படத்தைப் போட்டு இந்த வசனத்தையும் பக்கத்தில் போட்டு புல்லரிக்க வைத்து விட்டார்கள் பேஸ்புக்கி்ல் பலர்.

  புதுப்பேட்டை 2006:

  புதுப்பேட்டை 2006:

  சார்...யாராவது இருக்கீங்களா..?

  செம்ம டயலாக்குல., இந்த படத்தின் வசனம் மட்டுமில்லை கதாப்பாத்திரத்தின் பெயர் கொக்கி குமார் கூட இப்போ லேட்டஸ்ட் தான். தனுஷ் நடித்த மற்றும் அவர் பேசிய பல வசனங்களே இன்றைய இளஞர்கள் பேசப்படும் வார்த்தைகளாக இருக்கின்றது.

  பில்லா:

  பில்லா:

  சரித்தரத்த ஒருநிமிஷம் பாருங்க. அது நமக்கு கத்துகொடுத்தது ஒண்ணுதான் நாம வாழனும்னா எத்தன பேரையும் கொல்லலாம். என்னோட வாழ்க்கைல வர ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நிமிஷமும் நானே செதுக்குனது.

  இந்த வசனங்கள படிக்குறப்ப நமக்கே வாய் சகட்டு மேனி டான்ஸ் ஆடுகிறது என்றால், தல சொல்லும் போது எப்படி இருக்கும்..? இது மட்டுமா... தலயோட பல வசனங்களும் பிரபலம் தான்.

  சிவாஜி 2007:

  சிவாஜி 2007:

  சிங்கம். சிங்கிளாதான் வரும்., பாஸ் மொட்டை பாஸ்

  தலைவரோட பல பஞ்ச் டயலாக்கும் இப்போ டிரண்ட்தா பாஸ். வாங்க பழகலாம்னு காலத்துக்கும் பழகிகிட்டே இருக்கும். இது போதாதா தலைவரோட மவுச அப்பிடியே வச்சுருக்கும்.

  போக்கிரி 2007:

  போக்கிரி 2007:

  ஒரு தடவ முடிவு பண்ணிட்டேனா, நானே என் பேச்சை கேக்க மாட்டேன்..!

  இது இன்றைய இளஞர்கள் மட்டுமில்லை, குட்டீஸ்களும் பயன்படுத்தும் எதார்த்த வார்த்தையாக மாறிவிட்டது. தளபதி கெத்துக்காக பேசிய பல வசனங்கள் தற்போது நகைச்சுவையாக பேசப்படுகின்றது.

  லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்.. என்ன கொடு்மை சார் இது...??? இந்த வசனம் எப்படி பிரபலமானது என்பதற்கு டீட்டெய்ல் வேறு தேவையா என்ன....!

  English summary
  Hero's punch dialogues are tuned on comedy dialogues.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X