விஷ்ணு விஷால் -சுனைனா நடிப்பில் வெளியான நீர்ப்பறவை… 9 ஆண்டு கொண்டாட்டத்தில் படக்குழு

சென்னை : நடிகர் விஷ்ணு விஷால், சுனைனா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2012 நவம்பர் 30ம் தேதி வெளியான படம் நீர்ப்பறவை.

உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தை இயக்கியிருந்தார் சீனு ராமசாமி.

தற்போது இந்தப் படம் வெளியாகி 9 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது. இதுகுறித்து படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

நீர்ப்பறவை படம்

நீர்ப்பறவை படம்

நடிகர் விஷ்ணு விஷால், சுனைனா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2012 நவம்பர் 30ம் தேதி வெளியான படம் நீர்ப்பறவை. இந்தப் படம் இயல்பான கதைக்களத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. சீனு ராமசாமி கதை, திரைக்கதை மற்றும் இயக்கத்தில் இந்தப் படம் வெளியானது. உதயநிதி ஸ்டாலின் படத்தை தயாரித்திருந்தார்.

சீனு ராமசாமி இயக்கம்

சீனு ராமசாமி இயக்கம்

மேலும் படத்தில் நந்திதா தாஸ், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், அழகம்பெருமாள், தம்பி ராமையா, வடிவுக்கரசி, பசங்க சிவக்குமார் உள்ளிட்டவர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்தில் சீனு ராமசாமியும் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். கடலோர மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு அவர்களது காதல், துக்கம், கடல் உள்ளிட்டவற்றை கதைக்களமாக கொண்டு இந்தப் படம் வெளியானது.

இயல்பான கதைக்களம்

இயல்பான கதைக்களம்

படத்தில் அருளப்பசாமியாக விஷ்ணுவும் எஸ்தராக சுனைனாவும் நடித்திருந்தனர். குடிகாரனாக இருக்கும் அருளப்பசாமியை வழிப்படுத்தும் காதலியாக, மனைவியாக சுனைனா நடித்திருந்தார். இயல்பான கதைக்களத்துடன் இந்தப் படம் எடுக்கப்பட்ட விதம் அனைவரையும் கவர்ந்தது. சீனு ராமசாமியின் படங்களில் இந்தப் படம் முக்கியமான படமாக அமைந்தது.

மீனவர்கள் வாழ்க்கை

மீனவர்கள் வாழ்க்கை

கடலுக்கு செல்லும் மீனவர்கள் சிங்களப் படையினரால் கொல்லப்படுவதும் இந்தப் படத்தில் காட்சிப் படுத்தப்பட்டிருந்தது. சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டவர்களும் தங்களது இயல்பான நடிப்பை படத்தில் காட்சிப் படுத்தியிருந்தனர். அனைவரது கேரக்டர்களையும் சிறப்பாக உருவாக்கியிருந்தார் சீனு ராமசாமி.

9 ஆண்டு கொண்டாட்டம்

9 ஆண்டு கொண்டாட்டம்

இந்நிலையில் இந்தப் படம் வெளியாகி 9 ஆண்டு கொண்டாட்டத்தை படக்குழுவினர் தற்போது கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி படத்தின் நினைவலைகளையும் பகிர்ந்து வருகின்றனர். படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவையும் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுளளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X