வெந்து தணிந்தது காடு...போஸ்டருடன் அடுத்த கேரக்டர் அறிமுகம்...யாரு தெரியுமா?

சென்னை : சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது காடு படத்தில் அடுத்த கேரக்டரை புதிய போஸ்டருடன் வெளியிட்டுள்ளனர். இதை பார்த்த பலரும் இவரும் இந்த படத்தில் நடிக்கிறாரா, இதை எதிர்பார்க்கவே இல்லையே என ஆச்சரியத்துடன் கேட்டு வருகின்றனர்.

டைரக்டர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு லீட் ரோலில் நடிக்கும் படம் வெந்து தணிந்தது காடு. ஐசரி கணேசனின் வேல்ஸ் இன்டர்நேஷனல் இந்த படத்தை தயாரிக்கிறது. ஆக்ஷன் படமாக எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் ராதிகா சரத்குமார், சித்தி இத்னானி, நீரஜ் மாதவ் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.

மூன்று கெட்அப்களில் சிம்பு

மூன்று கெட்அப்களில் சிம்பு

ஏ.ஆர்.ரஹ்மான், கெளதம் மேனன், சிம்பு கூட்டணி நான்காவது முறையாக இணைந்துள்ள இந்த படத்தின் ஷுட்டிங் கிட்டதட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. இறுதிக்கட்டமாக சில ஸ்டன்ட் காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் சிம்பு மூன்று விதமான கெட்அப்களில் நடித்திருப்பதாகவும், இந்த படம் இந்த ஆண்டு இறுதிக்குள் ரிலீஸ் செய்யப்படும் எனவும் தயாரிப்பாளர் ஐசரி கணேசன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறி இருந்தார்.

யாருக்கு என்ன கேரக்டர்

யாருக்கு என்ன கேரக்டர்

இந்த படத்தில் சிம்பு முத்து என்ற கேரக்டரில் நடிப்பதை சிறப்பு போஸ்டர் ஒன்றின் மூலம் அறிவித்தனர். சிம்புவின் அம்மாவாக ராதிகா நடிக்கிறார் இதைத் தொடர்ந்து முத்துவின் பாவை என்ற கேப்ஷனுடன் சித்தி இத்னானியின் கேரக்டருக்கும் போஸ்டர் வெளியிட்டனர். சிம்புவின் பிறந்தநாளன்று படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் வெளியிடப்படலாம் என கூறப்பட்டு வந்த நிலையில், மற்றொரு புதிய போஸ்டரை வெளியிட்டனர்.

இவர் இந்த கேரக்டரில் நடிக்கிறாரா

இவர் இந்த கேரக்டரில் நடிக்கிறாரா

இந்நிலையில் நேற்று நீரஜ் மாதவ், ஸ்ரீதரன் என்ற கேரக்டரில் நடிப்பதாக மற்றொரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர் . சிவப்பு பேக்கிரவுண்டில் சிம்புவிற்கு பின்னால் நீரஜ் அமர்ந்திருப்பது போல் இந்த போஸ்டர் அமைக்கப்பட்டுள்ளது. தி ஃபேமிலி மேன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நீரஜ் மாதவ். இதனால் இவர் தான் வில்லனா அல்லது சிம்புவின் நண்பரா என பலரும் கேட்டு வருகின்றனர்.

தாமதத்திற்கு இதுதான் காரணமா

தாமதத்திற்கு இதுதான் காரணமா

வெந்து தணிந்தது காடு படத்தை ஏப்ரல் 14 ம் தேதி ரிலீஸ் செய்ய ஐசரி கணேசன் திட்டமிட்டிருந்தாராம்.ஆனால் ஷுட்டிங் முடிய தாமதமாகி வருகிறது. இந்த படத்தை தெலுங்கிலும் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருப்பதாலும் தான் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஜுன் மாதத்திற்கு அல்லது அதற்கு பிறகு இந்த படம் ரிலீஸ் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. தற்போது ஆக்ஷன் காட்சிகள் வித்தியாசமான லுக்கில் எடுக்கப்பட்டு வருவதால் தான் ஷுட்டிங் முடிய தாமதமாவதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X