'காலா' பாடலில் இடம்பெறும் நீட் அனிதா போஸ்டர்.. ரஞ்சித்தின் செம டீட்டெய்லிங்!

By Vignesh Selvaraj

Recommended Video

காலாவில் நீட் அனிதா போஸ்டர்.. ரஞ்சித்தின் செம டீட்டெய்லிங்!- வீடியோ

சென்னை : பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் 'காலா' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதற்கு முன்பே, இந்தப் படப் பாடல்களின் லிரிக்கல் வீடியோக்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியிருக்கும் இந்தப் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாக உருவாக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பாடல்களில் ஒடுக்கப்பட்டவர்களின் குரல்கள் ஒலித்திருக்கின்றன.

Neet Anitha poster in kaala song

'தெருவிளக்கு வெளிச்சத்துல நாங்க முன்னேறி வருவோம் உயரத்துல.." எனத் தொடங்கும் பாடலின் லிரிக்கல் வீடியோவில் வரும் காட்சி ஒன்றில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த அனிதாவின் மறைவு போஸ்டர் காட்டப்பட்டுள்ளது.

டாக்டர். அனிதா. தமிழர்கள் நாங்கள் நீட் தேர்வுக்கு எதிரானவர்கள் எனக் குறிப்பிடப்பட்டு மும்பை விழித்தெழு இயக்கம் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மும்பை தாராவியில் நடக்கும் கதையாக இருந்தாலும் ஆங்காங்கே சமகால அரசியல் டச் கொடுத்திருக்கிறார் பா.ரஞ்சித்.

பாடலின் லிரிக்கல் வீடியோவில் இடம்பெற்றுள்ள இந்த காட்சியை ரசிகர்கள் பலரும் கவனித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இதுபோல படம் எங்கும் சின்ன சின்ன விஷயங்களிலும் டீட்டெயிலிங் காட்டியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X