Don't Miss!
- News
செல்ஃபி புள்ளை! மலை பூங்காவின் "கேமராவை" தூக்கிய கரடி.. ஒன்னு ரெண்டு இல்ல 400 போட்டோ எடுத்து அசத்தல்
- Finance
மாதம் 8000 சம்பளம் வாங்கியவர், தினமும் 6 கோடி சம்பாதிக்கிறார்.. யார் இந்த நிதின்..!
- Sports
கே.எல்.ராகுலை தொடர்ந்து அக்ஷர் பட்டேல்.. சைலண்ட்டாக நடந்து வரும் திருமணம்.. யார்? யார்? பங்கேற்பு
- Technology
50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.!
- Lifestyle
15 நிமிடத்தில் ருசியான சிக்கன் கிரேவி செய்வது எப்படி?
- Automobiles
"தாலாட்டும் காற்றே வா..." நடிகர் அஜித் பயன்படுத்திய ஜீப் மாறி இருக்கே!! ஆனால் உண்மையில் எந்த வாகனம் தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
ஆஸ்கர் திரையிடல்.. ஒத்த செருப்பை பாராட்டிய நீத்து சந்திரா!
லாஸ் ஏஞ்சல்ஸ்: பார்த்திபன் தயாரித்து, இயக்கி, நடித்த ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படம், தமிழ்நாட்டு விமர்சகர்களிடம் மட்டுமின்றி உலகளவில் பாராட்டுக்களை குவித்து வருகிறது.
கோல்டன் குளோப், ஆஸ்கர் என பல உலக சினிமா விழாக்களில் திரையிட்டு காண்பித்து பாராட்டுக்களை அள்ளி வருகிறார் பார்த்திபான்.
இந்த படத்திற்கு ஆஸ்கர் விருது வென்ற ரசூல் பூக்குட்டி இசையமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

தனி ஒருவன்
ஒரே ஒரு நடிகர் மட்டுமே நடித்த படங்கள் உலகளவில் சில வந்திருந்தாலும், தமிழ்நாட்டில் பார்த்திபன் நடிப்பில் புதுமுயற்சியாக இந்த ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படம் வித்தியாசம் காட்டியது. தமிழ்நாட்டில் உள்ள விமர்சகர்கள், ரசிகர்கள் என பலரும் ஒத்த செருப்பு படத்தை பாராட்டினாலும், இங்கே அந்த படம் மிகப்பெரிய வசூலை குவிக்கவில்லை.

புதிய பாதை
தனது எழுத்து மற்றும் இயக்கத்தின் மூலம் பல புதிய பாதைகளை நடிகர் பார்த்திபன் உருவாக்கி வருகிறார். அவரது விடா முயற்சியின் பலனாக ஒத்த செருப்பு சைஸ் 7 படம் உலகளவில் பாராட்டுக்களை அள்ளி வருகிறது. ஒரு கொலைக் குற்றவாளியின் வாக்குமூலமாக அவனது பார்வையில் இருந்து மட்டுமே இந்த கதை சொல்லப்பட்டிருந்த விதம், படத்திற்கு பக்க பலமாக அமைந்திருந்தது.

ஆஸ்கர் பட்டியல்
கடந்த செப்டம்பர் 20ம் தேதி வெளியான ஒத்த செருப்பு படம், ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் அனுப்பப்படும் பட்டியலில் இடம்பெற்று இருந்தது. ஆனால், ஒத்த செருப்பு, சூப்பர் டீலக்ஸ், வடசென்னை உள்ளிட்ட படங்களில் ஒன்று கூட இறுதி பரிந்துரை பட்டியலுக்கு செல்லவில்லை. ரன்வீர் கபூர், ஆலியா பட் நடிப்பில் வெளியான கல்லி பாய் படம் மட்டுமே இந்தியாவின் சார்பாக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது.

விடுவதாக இல்லை
ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தை இந்தியா அனுப்பவில்லை என்றாலும், நடிகர் பார்த்திபன் விடுவதாக இல்லை. கோல்டன் குளோப் மற்றும் ஆஸ்கர் குழுவினருக்கு தனது ஒத்த செருப்பு படத்தை பிரத்யேக திரையிடலாக திரையிட்டு பாராட்டுக்களை அள்ளி வருகிறார்.
|
நீத்து சந்திரா பாராட்டு
விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளை மற்றும் ஜெயம் ரவியின் ஆதிபகவன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள பாலிவுட் நடிகை நீத்து சந்திரா, ஆஸ்கர் திரையிடலின் போது கலந்து கொண்டிருக்கிறார். படத்தை பார்த்த நீத்து சந்திரா, இந்த படத்தின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் பார்த்திபனுடன் இருக்கும் புகைப்படத்துடன் சேர்த்து பதிவிட்டுள்ளார்.