மாசம் 25 லட்சம் சம்பளம்...மனைவியா வர்றியான்னு கேட்ட தொழிலதிபர்...நடிகை திடுக்கிடும் தகவல்

சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமா நடிகைகள் பலரும் தங்களின் மோசமான திரையுலக அனுபவங்களை ஓப்பனாக பேட்டியில் பகிர்வது அதிகரித்து வருகிறது. பாலியல் தொல்லைகள் பற்றிய பலரும் வெளியிடும் தகவல்கள் அனைவரையும் அதிர வைத்து வருகிறது.

அப்படி லேட்டஸ்டாக நடிகை நீது சந்திரா பேட்டியில் தெரிவித்துள்ள விஷயங்கள் மொத்த திரையுலகையும், ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இவர் நடிகை மட்டுமல்ல மாடல், தயாரிப்பாளரும் கூட. இவருக்கே இப்படியா என அனைவரும் ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.

தெலுங்கு, இந்தி, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் பிரபலமான நடிகையாக இருப்பவர் நீது சந்திரா. தமிழில் யாவரும் நலம், தீராத விளையாட்டு பிள்ளை, யுத்தம் செய், ஆதி பகவான், சேட்டை, சிங்கம் 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தேசிய விருது நடிகை

தேசிய விருது நடிகை

2005 ம் ஆண்டு கரம் மசாலா படத்தின் முலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்தார். இவர் தேசிய விருதும் வாங்கி உள்ளார். இவரது படங்களும் தேசிய விருது வாங்கி உள்ளன. இவர் சமீபத்தில் ஆங்கில மீடியா ஒன்றிற்கு பேட்டி அளித்தார்.

பணமும் இல்லை வேலையும் இல்லை

பணமும் இல்லை வேலையும் இல்லை

நீது சந்திரா தனது பேட்டியில், எனது கதை தோல்வி அடைந்த ஒரு வெற்றிபெற்ற நடிகையின் கதை. நான் 13 தேசிய விருது பெற்றவர்களுடன் பெரிய படங்களில் பணியாற்றி உள்ளேன். ஆனால் இப்போது என்னிடம் பணமும் இல்லை. வேலையும் இல்லை.

 சம்பளத்துடன் மனைவியாக இருக்க அழைப்பு

சம்பளத்துடன் மனைவியாக இருக்க அழைப்பு

ஒரு பெரிய தொழிலதிபர் என்னிடம் மாதம் 25 லட்சம் தருகிறேன். சம்பளம் வாங்கிக் கொண்டு மனைவியாக இரு என அழைத்தார். எனக்கு இன்று வேலையில்லை. மிகவும் வேதனையாக உள்ளது. இத்தனை படங்களில் பணியாற்றினாலும் தேவையில்லாதவளாக நான் உணர்கிறேன்.ஒரு பிரபலமான டைரக்டர், நான் அவரின் பெயரை சொல்ல விரும்பவில்லை. அவர் ஆடிசனில் ஒரு மணி நேரத்திலேயே என்னை நிராகரித்தார்.மொத்தமாக என்னுடைய நம்பிக்கையை உடைத்தார்.

 சொந்த முயற்சியால் உயர்ந்துள்ளேன்

சொந்த முயற்சியால் உயர்ந்துள்ளேன்

எல்லாமே ஒரு நாள் மாறும். அது தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. நான் எனது சொந்த முயற்சியில் ஹாலிவுட் பட வாய்ப்பை பெற்றுள்ளேன். ஒரு பெண் தனது முயற்சியில், எந்த பின்புலமும் இல்லாமல் லீட் ரோலில் நடிக்கும் வாய்ப்பை பெற்றதை இவர்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. அவர்களால் நம்ப முடியவில்லை என்பதே அதிர்ச்சியாக உள்ளது என்றார். நீது சந்ரா தற்போது ஹாலிவுட் மற்றும் 2 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X