ஷூட்டிங்கில் கலந்துகொண்ட ஹீரோ, இயக்குனருக்கு கொரோனா பாதிப்பு.. படப்பிடிப்பு நிறுத்தம்!

By

மும்பை: படப்பிடிப்பில் கலந்துகொண்ட பிரபல ஹீரோவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக, உலக நாடுகள் கடும் பிரச்னையை எதிர்நோக்கி உள்ளன. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல.

உலகில் மோசமான பாதிப்புக்குள்ளான நாடுகளில் இரண்டாம் இடத்தில் இந்தியா இருக்கிறது. முதல் இடத்தில் அமெரிக்கா இருக்கிறது.

குறைந்து வருகிறது

குறைந்து வருகிறது

இந்தியாவில் மத்திய, மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கைகள் காரணமாக கொரோனா பரவல், கட்டுப்பாட்டுக்குள் கொஞ்சம் வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த சில மாதங்களாக, கொரோனா பரவல் குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. இருந்தாலும் மக்களிடம் பயம் போகவில்லை.

பாதிப்பு எண்ணிக்கை

பாதிப்பு எண்ணிக்கை

நாட்டில் மொத்தமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95 லட்சத்தை கடந்து விட்டது. 95 லட்சத்து 71 ஆயிரத்து 559 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 39 ஆயிரத்து 188 ஆக உயர்ந்துள்ளது.

ஜக் ஜக் ஜீயோ

ஜக் ஜக் ஜீயோ

இந்நிலையில், சினிமா படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர், நடிகைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. பிரபல இந்தி ஹீரோ வருண் தாவன். இவர் இப்போது நடிக்கும் படம், ஜக் ஜக் ஜீயோ (Jug Jugg Jeeyo). இதில் நீது கபூர், அனில் கபூர் உட்பட பலர் நடிக்கின்றனர்.

கொரோனா டெஸ்ட்

கொரோனா டெஸ்ட்

ராஜ் மேத்தா இயக்கும் இதன் ஷூட்டிங் சண்டிகரில் நடந்து வந்தது. அதில் கலந்துகொண்ட, வருண் தாவன், நீது கபூர் மற்றும் இயக்குனருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.

எனக்கு நெகட்டிவ்

எனக்கு நெகட்டிவ்

அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், தனக்கு கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளதாக நடிகர் அனில் கபூர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். உங்கள் வாழ்த்துகளுக்கும் விசாரிப்புகளுக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார். இதன் ஷூட்டிங் கொரோனா லாக்டவுனுக்கு பிறகு கடந்த மாதம்தான் தொடங்கியது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X