நீயாவுக்கும் நீயா 2க்கும் உள்ள 3 ஒற்றுமைகள் என்ன தெரியுமா?

நீயா 2 படத்தில் கருநாக பாம்பின் சாகசங்கள் நிறைந்திருக்கும் என்று அப்படத்தின் இயக்குனர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை: நீயா படத்திற்கும் நீயா 2 படத்திற்கும் உள்ள ஒற்றுமைகள் குறித்து இயக்குனர் சுரேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

ஜெய், கேத்தரின்தெரசா, ராய் லட்சுமி, வரலட்சுமி மற்றும் பலர் நடித்துள்ள படம் 'நீயா2'. இத்திரைப்படம் மே 10ம் தேதி வெளியாகிறது.

இச்சாதாரி பாம்புகளை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில், கருநாகம் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறது. இப்படத்தில் பாம்பின் கிராஃபிக்ஸ் காட்சிகள் சுமார் 40 நிமிடங்கள் நிறைந்திருக்கும்.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் சுரேஷ் கூறியதாவது,

கோப்ரா வில்லேஜ்

கோப்ரா வில்லேஜ்

பாம்பிற்காக நாங்கள் பல இடங்களில் தேடி அலைந்து இறுதியாக பாங்காக்கில் உள்ள கோப்ரா வில்லேஜ் என்ற இடத்தில் உள்ள பாம்பைத்தான் தேர்வு செய்தோம். இது எங்களுக்கு மிகப் பெரிய அனுபவமாக இருந்தது.

நிஜ பாம்பு செட்டாகவில்லை

நிஜ பாம்பு செட்டாகவில்லை

முதலில் நிஜ பாம்பை வைத்து எடுக்கத்தான் முடிவு செய்தோம். ஆனால், அங்குள்ள பாம்பிற்கு ஒரு வார காலம் தான் நிஜ உருவம் இருக்கும். அதற்கு மேல் தோல் உரிவதும் வளர்வதுமாக இருப்பதால் படப்பிடிப்பிற்கு உகந்ததாக இருக்காது என்று கிராஃபிக்ஸ் செய்ய முடிவெடுத்தோம்.

திரைக்கதை தான் பலம்

திரைக்கதை தான் பலம்

இப்படத்தின் மிகப்பெரிய பலம் திரைக்கதை தான். அதுமட்டுமில்லாமல், பாம்பின் சாகச காட்சிகளும் இருக்கும். மேலும், 'நீயா' படத்தில் நல்ல பாம்பு இடம் பெற்றிருக்கும். அதைவிட அதிகமாக பயம் ஏற்பட வேண்டும் என்பதற்காக கருநாகத்தைத் தேர்ந்தெடுத்தோம்.

மூன்று ஒற்றுமைகள்

மூன்று ஒற்றுமைகள்

அதேபோல், 'நீயா' படத்திற்கும் இந்த படத்திற்கும், மூன்று சம்பந்தம் உள்ளது. 'பெயர்', 'பாம்பு' மற்றும் 'ஒரே ஜீவன்' பாடல் இவை மூன்றை தவிர அந்த கதைக்கும், இந்த கதைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நீயா படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமாக பாம்பு உருவம் மாறி பழி வாங்கும். ஆனால், இந்த படத்தில் அப்படி இருக்காது. இப்படத்தில் பாம்புக்கென்று பெயர் கிடையாது". இவ்வாறு அவர் கூறினார்.

More from Filmibeat

Read more about: neeya 2 நீயா 2
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X