ஓஓஓஓ... வெளியானது நீயா 2 போஸ்டர் வெளியீடு.. பரபர பாம்பாக "வரு"!

By Rajeswari

சென்னை: நடிகை ஸ்ரீப்ரியா நடித்து 1979 ஆம் ஆண்டு வெற்றி நடைபோட்ட படம் நீயா. அதன் இரண்டாம் பாகம் தமிழில் உருவாகிறது. அதன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

1979 ஆம் ஆண்டு பெரிய நடிகர் பட்டாளத்துடன் வெளியான நீயா திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் அதில் நடிகை ஸ்ரீப்ரியா, கமல், லதா போன்ற முன்னணி ஸ்டார்கள் நடித்திருந்தனர்.

Neeya Movie part 2 poster released

பாம்புப் படம் அது. தன் காதலன் பாம்பைக் கொன்ற மனிதர்களைப் பழிவாங்க நினைக்கும் இச்சாதாரி பெண் பாம்பு எப்படி அவர்களைக் கொல்கிறது என்பதுதான் அந்தப் படத்தின் கதை.

அந்தப் படத்தில் நடிகை ஸ்ரீப்ரியா பாம்பாக நடித்திருப்பார். அந்தப் படத்தை அவர்தான் தயாரித்தார். இந்நிலையில் தற்போது நீயா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது.

Neeya Movie part 2 poster released

இந்தப் படத்தை ஜம்போ சினிமா நிறுவனத்தின் சார்பில் எ. ஸ்ரீதர் தயாரிக்கிறார், எல். சுரேஷ் இயக்குகிறார்.

இந்தப் படத்தின் இயக்குநர் எல்.சுரேஷ் கூறுகையில், நீயா முதல் பாகம் போலவே பாம்பு பழிவாங்கும் கதை தான். ஆனால் கதை களம் முழுக்க வேறுவடிவில் இருக்கும் என்று கூறினார்.

இந்த படத்தின் நாயகி அதாவது இச்சாதாரி பாம்பாக வருகிறார் வரலட்சுமி. இவர் ஒரு நடன கலைஞர் என்பதால் இந்தப் படத்திற்கு இவர் பொருத்தமாக இருப்பார் என்று இவரை பாம்பாக்கி விட்டனர். நாயகன் ஜெய். இந்தப் படத்தில் வரலட்சுமி தவிர, லட்சுமி ராய், கேத்ரின் தெரசா ஆகியோரும் உள்ளனர்.

இந்தப் படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் நீயா முதல் பாகத்தில் ஸ்ரீப்ரியா கொடுத்த அதே பாம்பு போஸை, நீயா 2 படத்தின் வரலட்சுமி கொடுத்திருக்கிறார். போஸ்டரைப் பாருங்க.. பாம்பு போஸில் வரு எப்படி இருக்கிறார்...!

More from Filmibeat

Read more about: part 2 movie poster படம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X