நீயாநானா புகழ் கோபிநாத்க்கு இன்று பிறந்தநாள்.. ரசிகர்கள் வாழ்த்து!

சென்னை : தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் மிகவும் பிரபலமான தொகுப்பாளரான கோபிநாத் மக்கள் மத்தியில் மிகவும் மதிக்கத்தக்க ஒரு நபராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Recommended Video

Varalakshmi Sarathkumar Marriage Exclusive Update | Cricket Star, Velvet Nagaram, Sarathkumar

இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தாலும் நீயாநானா இவரது அடையாளமாகவே மாறிவிட்டது. இந்நிலையில் கோபிநாத் இன்று தனது பிறந்தநாளை குடும்பத்தாருடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்.

ஜூலை 4-ஆம் தேதியான இன்று தனது 45 ஆவது பிறந்தநாளை மிகவும் மகிழ்ச்சியுடன் குடும்பத்தாரின் ஆசிர்வாதத்துடன் கொண்டாடிவரும் இவருக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

பலரின் மனதிலும்

பலரின் மனதிலும்

தன்னுடைய நிகழ்ச்சிகளிலும், மேடை பேச்சுக்களாலும் பலரின் மனதிலும் தன்னம்பிக்கைகளை வளர்த்து வாழ்க்கையில் முன்னேற கூடிய எண்ணங்களை விதைத்து பலரின் தன்னம்பிக்கைக்கும் வித்திட்டு வருபவர் தொகுப்பாளர் நீயா நானா கோபிநாத்.

சிறந்த பேச்சாளராகவும்

சிறந்த பேச்சாளராகவும்

நீயா நானா என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடம் மிகவும் பிரபலமான கோபிநாத், நிகழ்ச்சி தொகுப்பாளராக மட்டுமல்லாமல் சிறந்த பேச்சாளராகவும் இருந்து வருகிறார். இவரின் பல மேடைப்பேச்சுக்கள் பல இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக இன்றும் இருந்து வருகிறது.

தொலைக்காட்சியில்

தொலைக்காட்சியில்

பத்திரிக்கையாளர், நிருபர், செய்தி வாசிப்பாளர், ரேடியோ தொகுப்பாளர், மற்றும் எழுத்தாளர் என பல முகங்களைக் கொண்ட கோபிநாத் தொலைக்காட்சியில் பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார்.

செல்லமாக அழைப்பார்கள்

செல்லமாக அழைப்பார்கள்

இவ்வாறு இவர் தொகுத்து வழங்கி வரும் நீயா நானா நிகழ்ச்சி எந்த அளவுக்கு பிரபலமோ அதே போன்று அந்த நிகழ்ச்சியில் இவர் அணிந்திருக்கும் கோட்டும் மிகப் பிரபலமானது. அதனாலேயே நீயா நானா கோபிநாத்தை அவரது நெருங்கிய நண்பர்கள் சிலர் "கோட் கோபிநாத்" என செல்லமாக அழைப்பார்கள்.

சிகரம் தொட்ட மனிதர்கள்

சிகரம் தொட்ட மனிதர்கள்

பலருக்கும் இவர் நீயா நானா என்ற நிகழ்ச்சி மூலம் மிக பிரபலமான நபராக தெரியும் ஆனால் அதற்கு முன்பே இவர் "மக்கள் யார் பக்கம்", "சிகரம் தொட்ட மனிதர்கள்" போன்ற பலமான நிகழ்ச்சிகளில் வெற்றிகரமான மனிதர்களையும், இந்தியாவில் போற்றத்தக்க சில தலைவர்களையும் வைத்து பல சிறப்பான நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறார்.

நடந்தது என்ன

நடந்தது என்ன

மறைந்த ஜனாதிபதி ஐயா ஏபிஜே அப்துல்கலாம் மற்றும் கலைஞர் கருணாநிதி உட்பட பல தலைச்சிறந்த தலைவர்களை பேட்டி எடுத்த கோபிநாத்
"நடந்ததுஎன்ன" என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
நாட்டில் அவ்வப்போது நடக்கும் அசாதாரண சூழ்நிலைகளில் வரும் பிரச்சினைகளை அதன் உண்மைகளையும் கண்டறிந்து வெளிச்சம்போட்டு காட்டப்படும் நிகழ்ச்சியாக "நடந்ததுஎன்ன" இருந்து வந்தது.

மாற்றங்களும் நிகழ்ந்துள்ளது

மாற்றங்களும் நிகழ்ந்துள்ளது

இவ்வாறு பல்வேறு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்த கோபிநாத் இன்றும் நீயா நானா நிகழ்ச்சியை இவர் மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார். டிவி நிகழ்ச்சிகளின் மூலம் சமூகத்திற்கு தேவையான தலைப்புகளை கொண்டு விவாதிக்கப்படும் இந்த நீயா நானா நிகழ்ச்சியின் மூலம் சமூகத்தில் பல மாற்றங்களும் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2 லட்சம் பிரதிகள்

2 லட்சம் பிரதிகள்

இவ்வாறு தனது மேடைப் பேச்சுகளிலும் நிகழ்ச்சிகளிலும் பல்வேறு வகையான மக்களுக்கு பல நல்ல செய்திகளை சொல்லிவரும் கோபிநாத் "ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!" என்ற ஒரு புத்தகத்தையும் எழுதியுள்ளார்.
இவ்வாறு வித்தியாசமான தலைப்புடன் இவர் எழுதியுள்ள இந்த புத்தகம் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பிரதிகள் விற்று தீர்ந்து போய் உள்ளன.

கம்பீரமான பேச்சுடனும்

கம்பீரமான பேச்சுடனும்

இவ்வாறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் மட்டுமே பிரபலமான கோபிநாத் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். வாமனன், தோனி, நிமிர்ந்து நில் மற்றும் திருநாள் போன்ற படங்களில் தனது மிடுக்கான நடை உடனும், கம்பீரமான பேச்சுடனும் என நடிப்பிலும் திரைப்படங்களில் கலக்கி வருகிறார்.

குடும்பத்தாருடன்

குடும்பத்தாருடன்

இவ்வாறு தொலைக்காட்சி மற்றும் திரைத்துறையில் பல்வேறு முகங்களை கொண்டு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நீயா நானா கோபிநாத் இன்று தனது பிறந்தநாளை தனது குடும்பத்தாருடன் இணைந்து மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார். ஜூலை 4ஆம் தேதியான இன்று தனது 45வது பிறந்த நாளை கோபிநாத் கொண்டாடி வருவதையொட்டி அவரது ரசிகர்கள் மற்றும் பல்வேறு மக்களும் இவருக்கு வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X