என்ன தம்பி இப்டி பண்ணிட்டியே ... கவினை கலாய்த்த கோபிநாத்
சென்னை : விஜய் டிவி.,யில் மிக பிரபலமான நீயா நானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் கோபிநாத். இவர் ஜெயம் ரவி நடித்த நிமிர்ந்து நில் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். மேடை பேச்சாளராகவும் பிரபலமானவர் கோபிநாத்.
இதே விஜய் டிவி.,யில் சின்னத்திரை தொடர்களில் நடித்து, பிறகு பிக்பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் கவின். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் படங்களில் அசிஸ்டென்ட் டைரக்டராக பணியாற்றி வருகிறார்.

ஹீரோவான கவின்
மாஸ்டர், டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களில் அசிஸ்டென்ட் டைரக்டராக பணியாற்றிக் கொண்டே லிஃப்ட் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார் கவின். ஓடிடி.,யில் ரிலீசான இந்த படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. முற்றிலும் பேய் படமான இந்த படத்தில் சோஷியல் மெசேஜையும் கலந்து கொண்டுள்ளார் டைரக்டர்.

பாராட்டை குவிக்கும் லிஃப்ட்
சமீப காலத்தில் ஓடிடி.,யில் வெளியான தமிழ் படங்களிலேயே லிஃப்ட் படம் தான் சிறப்பாக, ரசிக்கும் படியாக உள்ளதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர். மலையாள படங்களின் வரிசையில் ஓடிடி தளத்தை மிக சரியாக கையாண்டு எடுக்கப்பட்டுள்ள படமாக லிஃப்டி படம் உள்ளதாக பலர் பாராட்டி உள்ளனர். கவினின் நடிப்பு, டான்ஸ் என அனைத்தும் பாராட்டை அள்ளி குவித்துள்ளது.

இப்டி பண்ணிட்டியேப்பா
இந்த படத்தை சமீபத்தில் பார்த்த கோபிநாத், வித்தியாசமான முறையில் பாராட்டி உள்ளார். இது பற்றி இன்ஸ்டாகிராமில் லிஃப்ட் படத்தின் ஸ்டில்லை பதிவிட்டு அதனுடன், லிஃப்ட்க்குள்ளயே ஏற விடாம பண்ணிபுட்டியே கவினு. very good work. so happy for you தம்பி. இயக்குனர் உள்ளிட்ட குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

வைரலாகும் பதிவு
கோபிநாத்தின் இந்த பதிவு செம வைரலாகி வருகிறது. இனி லிஃப்ட் பார்த்தாலே லிஃப்ட் படம் தான் ஞாபத்திற்கு வரும் என பலர் கமெண்ட் செய்துள்ளனர். கோபிநாத்தின் கருத்து மிக சரியானது என கூறி உள்ளனர். படத்தை அப்படி டிசைன் பண்ணீருக்காங்கன்னு சிலர் தெரிவித்துள்ளனர்.
Recommended Video

நயன்தாரா படத்தில் கவின்
லிஃப்ட் படத்தில் கவினுக்கு ஜோடியாக பிகில் படத்தில் நடித்த அமிர்தா அய்யர் நடித்துள்ளார். லிஃப்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து நயன்தாரா - விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படத்திலும் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











