கர்ப்பமாக இருப்பதை இப்படியும் கூட சொல்லலாமோ?: 'சோ க்யூட்' நயன்தாரா
Recommended Video

சென்னை: இமைக்கா நொடிகள் படத்தில் வரும் நீயும் நானும் அன்பே என்ற பாடல் வெளியாகி வைரலாகியுள்ளது. அதில் தான் நயன்தாரா கர்ப்பமாகியுள்ளார்.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, அதர்வா, அனுராக் கஷ்யப் உள்ளிட்டோர் நடித்துள்ள இமைக்கா நொடிகள் படம் நாளை ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் நயன்தாரா, விஜய் சேதுபதி வரும் நீயும் நானும் அன்பே பாடல் வீடியோ இன்று வெளியாகி வைரலாகியுள்ளது.

ஆர் யூ ஓகே பேபி என்று விஜய் சேதுபதி கேட்க பாடல் துவங்குகிறது. சும்மா சொல்லக் கூடாது வீடியோவில் நயன்தாரா ரொம்ப அழகாக இருக்கிறார். தான் கர்ப்பமானதை கணவர் விஜய் சேதுபதியிடம் வித்தியாசமாக தெரிவித்துள்ளார்.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசையில் பாடல் அருமையாக உள்ளது. மீண்டும் மீண்டும் பாடலை கேட்கத் தோன்றுகிறது. மேலும் வீடியோவையும் மீண்டும் மீண்டும் பார்க்கும் ஆவல் ஏற்படுகிறது.
காதலியின் பட பாடல் வீடியோவை இயக்குனர் விக்னேஷ் சிவன் ட்விட்டரில் ப்ரொமோட் செய்துள்ளார். கோலமாவு கோகிலா படம் ஹிட்டான நிலையில் நாளை இமைக்கா நொடிகள் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











