திடீரென டிரெண்டாகும் #பெத்தவர்ட்டபேசுங்கவிஜய் ஹாஷ்டேக்.. மீண்டும் ஆரம்பித்த ரசிகர்கள் சண்டை!
சென்னை: சமூக வலைதளங்களில் மீண்டும் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இடையே கடும் மோதல்கள் ஏற்பட்டுள்ளன.
#வாழவிடுங்கஅஜித் என்கிற ஹாஷ்டேக் மற்றும் #பெத்தவர்ட்டபேசுங்கவிஜய் என்கிற ஹாஷ்டேக் என இரு நெகட்டிவ் ஹாஷ்டேக்குகள் ட்விட்டரில் டிரெண்டாகி ரசிகர்கள் சண்டையை அதிகரித்துள்ளன.
தல அஜித்தின் வலிமை மற்றும் தளபதி விஜய்யின் பீஸ்ட் உள்ளிட்ட படங்களின் அப்டேட்கள் அடுத்தடுத்து வர வர இந்த சண்டை மேலும், அதிகரிக்கும் என்றே அஞ்சப்படுகிறது.

என்ன காரணம்
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களான அஜித் மற்றும் விஜய்க்கு எதிராக இப்படி இரு நெகட்டிவ் ஹாஷ்டேக்குகள் டிரெண்டாக என்ன காரணம் என்று பார்ப்போம். நடிகர் அஜித்தின் வீட்டின் முன் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை கிளப்ப விஜய் ரசிகர்கள் #வாழவிடுங்கஅஜித் ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்தனர். அதற்கு பதிலாக அஜித் ரசிகர்கள் #பெத்தவர்ட்டபேசுங்கவிஜய் என்கிற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

டிரெண்டிங்கில் டாப்
விஜய் ரசிகர்கள் ஒரு டிரெண்டிங்கை ஆரம்பித்து நடிகர் அஜித்தை இழிவுபடுத்திய நிலையில், அஜித் ரசிகர்கள் ஆரம்பித்த டிரெண்டிங் நடிகர் விஜய்யை இழிவுப்படுத்தும் விதமாக உள்ளது. இருவரில் டிரெண்டிங்கில் டாப் யார் என்பதற்கான போட்டிகளும் நடைபெற்று வருகிறது.

ரசிகர்கள் சண்டை
#வாழவிடுங்கஅஜித் எனும் ஹாஷ்டேக்கை போட்டு விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களுடன் வீண் சண்டை செய்து அவர்களை சூடேற்றி விட அடுத்த கணமே இன்னொரு ஹாஷ்டேக்கை போட்டு அஜித் ரசிகர்கள் ட்விட்டரையே போர்க்களமாக மாற்றி உள்ளனர்.

அப்பா மகன் பிரச்சனை
இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் தனக்கும் தனது மகன் நடிகர் விஜய்க்கும் இடையே உள்ள பிரச்சனைகள் குறித்து மீடியாக்களில் தொடர்ந்து பேசி வந்த நிலையில், ஏகப்பட்ட ட்ரோல்கள் அப்பா மகன் பிரச்சனையை மையமாக வைத்து இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
Recommended Video

பறக்கும் மீம்ஸ்
அஜித் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் மாறி மாறி சமூக வலைதளங்களில் ஒரு பக்கம் கெட்ட வார்த்தைகளால் சண்டையிட்டுக் கொள்ள மீம் க்ரியேட்டர்களும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு ஏகப்பட்ட மீம்களையும் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

தேவையில்லாத வேலை
ஒரு ஹீரோவை இன்னொரு ஹீரோவின் ரசிகர்கள் அசிங்கப்படுத்த நினைத்தால், அந்த ஹீரோவின் ரசிகர் நம்முடைய ஹீரோவையும் மோசமாக கிண்டல் செய்ய மாட்டார்களா என்பதை அனைத்து ரசிகர்களும் புரிந்து கொண்டால் யாருக்கும் சேதாரம் இருக்காது என்றும் நடுத்தர ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











