குட் பேட் அக்லி.. ட்விட்டரில் குவியும் நெகட்டிவ் விமர்சனம்.. மறுபடியும் அஜித் படத்துக்கு அல்வா தானா?

சென்னை: த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன், அடங்காதவன், பஹிரா, மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள படம் குட் பேட் அக்லி. த்ரிஷா, சிம்ரன், அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, யோகிபாபு, சுனில், ரெட்டின் கிங்ஸ்லி என பலர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து இருக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் உலகம் முழுவதும் இன்று தியேட்டரில் வெளியாகி உள்ளது. படத்தை அஜித் ரசிகர்கள் அலப்பறை செய்து கொண்டாடி வருகின்றனர்.மேலும், இப்படத்தில் அர்ஜூன் தாஸ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். சிம்ரன் ஆண்டி ரோலில் நடித்துள்ள்ளார்.

நெகட்டிவ் விமர்சனம்: குட் பேட் அக்லி படத்தை அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வரும் நிலையில், படத்திற்கு சிலர் நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். படம் பார்த்த இணையவாசி ஒருவர் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில், படத்திற்கு ஐந்துக்கு இரண்டு புள்ளி ஐந்து மதிப்பெண்களை கொடுத்திருக்கிறார். படத்தில் அஜித் வரும் காட்சிகள் மாஸாக இருக்கிறது. புரொடக்ஷன் வேல்வியும் நன்றாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். ஆனால், சரியான திரைக்கதை இல்லை, ஜீரோ எமோஷனல் கனெக்ட், அதிக சத்தம், ஸ்கிரீன்பிளே சரியில்லை என பதிவிட்டுள்ளார்.

Good Bad Ugly Ajith Nagative

இரண்டாம் பாதி இழுவை: படம் பார்த்த மற்றொரு இணையவாசி தனது பதிவில், அஜித்தின் அதிரடியான நடிப்பு ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. ஆனால், படத்தின் முதல்பாதியில் கதைக்களம் சரியாக அமையவில்லை. அதே போல, இரண்டாம் பாதி இழுவையாக இருக்கிறது. இயக்குநர் இன்னும் கதையில் கவனத்தை செலுத்தி இருக்க வேண்டும் என்று பதிவிட்டு இந்த படத்திற்கு 2.5/5 மதிப்பெண்களை கொடுத்திருக்கிறார்.

Good Bad Ugly Ajith Nagative

மிகவும் மோசமான படம்: குட் பேட் அக்லி படத்தை படு மோசனமா படம் என ஒரு இணையவாசி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், குட் பேட் அக்லி படத்தில் அஜித் அறிமுகக் காட்சி மற்றும் சில காட்சிகளை தவிர படத்தில் படத்தில் ரசிக்கும் படி எதுவுமே இல்லை, படம் பொறுமையை மிகவும் சோதிக்கிறது. பலவீனமாக கதை, ஜீரோ லாஜிக், மோசமான திரைக்கதை, மோசமான நடிப்பு, மோசமான பின்னணி,சென்டிமென்ட் என எதுவுமே இல்லை. அஜித்தில் கடந்த 15 ஆண்டு திரைப்பயணத்தில் இப்படம் மிக மோசமான திரைப்படமாக அமைந்துவிட்டது. ஏகே இப்படி இந்த படத்தின் கதையை கேட்டு, கையெழுத்திட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஆதிக்கின் AAA படத்தை நான் பார்க்கவில்லை, இப்போது என்னுடைய கேள்வி என்னவென்றால், அந்த படம் இவ்வளவு மோசமானதா என்பதுதான். கடவுளே, இவ்வளவு கேவலமான மற்றும் மோசமாக உருவாக்கப்பட்ட ஒரு ஸ்டாரி நடிகரின் படத்தை இதுவரையில் நான் பார்த்ததில்லை. இனிமேலாவது ffs, தயவு செய்து, கேவலமான படங்களை தயாரித்து, தயவு செய்து ரசிகர்களை சித்திரவதை செய்யாதீர்கள் என பதிவிட்டுள்ளார்.

கிரிஞ்ச் விருது: மற்றொருவர் இந்த ஆண்டின் சிறந்த க்ரிங்க் விருது Good Bad Ugly படத்திற்கு அதிகாரப்பூர்வமாக வழங்கப்படுகிறது. படத்தில் சண்டைக் காட்சி உச்சக்கட்ட காமெடியாக உள்ளது. என்னால், சிரிப்பை அடக்க முடியவில்லை என படத்தை பங்கமாக கிண்டலடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X