கெட்டப் மட்டும் தான் இருக்கு.. கோப்ராவுக்கு குவிந்த நெகட்டிவ் விமர்சனங்கள்.. நீளம் குறைகிறதா?

சென்னை: சியான் விக்ரம் வழக்கம் போல கஷ்டப்பட்டு உழைச்சாலும், இயக்குநரின் சொதப்பல் திரைக்கதையால் படம் படுத்தே விட்டது என விமர்சனங்கள் குவிந்துள்ளன.

கோப்ரா படத்திற்கு முதல் எதிரியாக பார்க்கப்பட்டதே அதன் 3 மணி நேரம் 3 நிமிடங்கள் 3 நொடி நீளம் தான்.

இந்நிலையில், நெகட்டிவ் விமர்சனங்களை தொடர்ந்து படத்தின் நீளத்தை குறைக்க படக்குழு முடிவு செய்திருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

மிஸ்ஸான ஹிட்

மிஸ்ஸான ஹிட்

சியான் விக்ரமுக்கு நிச்சயம் கோப்ரா திரைப்படம் பெரிய ஹிட்டாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், படத்தின் டிரைலரை போலவே படமும் ஒட்டுமொத்தமாக டல் அடித்து விட்டது. முதல் பாதியில் கணக்கு போட்டு கன்ஃபியூஸ் செய்யும் இயக்குநர் இரண்டாம் பாதியில் கோட்டை விட்டு விட்டார் என ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

வீணான உழைப்பு

வீணான உழைப்பு

ஐ, கடாரம் கொண்டான், சாமி ஸ்கொயர், மகான் என சியான் விக்ரமின் படங்கள் சொதப்பி வந்த நிலையில், கோப்ரா படத்திலும் அவரது உழைப்பு மொத்தமும் வீணாகி விட்டதாக ரசிகர்கள் ஃபீல் செய்து வருகின்றனர். படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றும் முதல் பாதியிலும் இரண்டாம் பாதியிலும் தேவையில்லாத இழுவைகள் படத்தை டிசாஸ்டர் ஆக்கி விட்டதாக நெகட்டிவ் விமர்சனங்கள் கிளம்பிய நிலையில், படக்குழு அதிரடி முடிவை எடுத்து உள்ளதாம்.

30 நிமிடம் குறைப்பு

30 நிமிடம் குறைப்பு

2.30 மணி நேரம் படம் க்ரிஸ்ப்பாக கட் செய்யப்பட்டு இருந்தால் நல்லா இருந்திருக்கும் என ரசிகர்கள் கருத்து சொல்லி வந்த நிலையில், படத்தின் நீளத்தை சுமார் 30 நிமிடங்கள் குறைக்கப் போவதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. படத்தின் டூரேஷன் தான் பெரிய சிக்கல் என பேசப்பட்டு வரும் நிலையில், இப்படியொரு முடிவை படக்குழு எடுத்துள்ளதாக கூறுகின்றனர். விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிளைமேக்ஸ் சொதப்பல்

கிளைமேக்ஸ் சொதப்பல்

ரன் டைமை குறைத்தாலும் சியான் விக்ரமின் கோப்ரா தப்பிக்குமா என்பது சந்தேகம் தான். தனுஷின் 3 படத்திலும் இப்படித்தான் பியூட்டிஃபுல் மைண்ட் படத்தை காப்பியடித்து வைத்தனர். அந்த படமும் சொதப்பியது. அதே நிலை தான் கோப்ரா படத்துக்கும். மேலும், அதன் கிளைமேக்ஸ் காட்சியில் நடந்த சொதப்பல் படத்தை காப்பாற்றுவது கடினம் தான். விக்ரமின் கெட்டப் மட்டுமே படத்தை காப்பாற்றாது என்றும் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

பொன்னியின் செல்வன் என்ன ஆகுமோ

பொன்னியின் செல்வன் என்ன ஆகுமோ

சியான் விக்ரமின் கோப்ரா சொதப்பிய நிலையில், இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படத்திலும் விக்ரம் தானே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் பிசினஸையும் கோப்ரா படத்தின் சொதப்பல் பாதிக்குமே என்றும் அந்த படம் எப்படி இருக்கப் போகுதோ? என ரசிகர்கள் புலம்ப ஆரம்பித்து விட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X