கர்ப்பமானதால் தான் நடிகை அவசர திருமணமா?: உண்மை என்ன?
Recommended Video

மும்பை: பாலிவுட் நடிகை நேஹா தூபியா கர்ப்பமானதால் தான் அவசரமாக திருமணம் செய்ததாக பேச்சு கிளம்பியது.
பாலிவுட் நடிகையும், மாடலுமான நேஹா தூபியா தனது காதலரான நடிகர் அங்கத் பேடியை கடந்த 10ம் தேதி திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணம் திடீர் என ஒரு குருத்வாராவில் வைத்து நடந்தது.
அனைவரும் சோனம் கபூரின் திருமணத்தை பற்றி பேசிக் கொண்டிருந்த நிலையில் நேஹாவின் திருமண செய்தி பலரையும் வியக்க வைத்தது.

திருமணம்
நேஹா கர்ப்பமாகிவிட்டார். அதனால் தான் அவசர அவசரமாக குருத்வாராவில் வைத்து திருமணத்தை நடத்தி முடித்துவிட்டார்கள் என்று ஆளாளுக்கு பேசத் துவங்கிவிட்டனர்.

விளக்கம்
நேஹாவின் கர்ப்ப பேச்சு குறித்து அவரின் தந்தை பிரதீப் தூபியா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, என் மகள் கர்ப்பமாக இல்லை. அவர்கள் சீக்கிரம் திருமணம் செய்து கொண்டதால் மக்கள் அப்படி நினைக்கிறார்கள். மக்கள் தங்களின் மனம் போல் வதந்தியை பரப்புவார்கள் என்றார்.

நேரம்
அங்கத் மற்றும் நேஹா வேலையில் மிகவும் பிசியாக உள்ளதால் 1, 2 நாட்கள் தான் கிடைத்தது. அதனால் சீக்கிரமாக திருமணத்தை நடத்தி முடித்துவிட்டோம் என்று பிரதீப் தெரிவித்துள்ளார்.

காத்திருப்பு
அங்கத் மற்றும் நேஹா நல்ல நண்பர்கள் என்பது இருவீட்டாருக்குமே தெரியும். நாங்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறோம் என்று அவர்கள் கூறுவதற்காக நாங்கள் காத்திருந்தோம். அவர்கள் தங்களின் விருப்பத்தை கூறியதும் சம்மதம் தெரிவித்தோம் என்கிறார் பிரதீப்.

வதந்தி
தன்னை விட 2 வயது சிறியவரை மணந்துள்ள நேஹாவை சிலர் கடுமையாக விமர்சித்தார்கள். இந்நிலையில் அவர் கர்ப்பமானதால் தான் அவசர திருமணம் நடந்துள்ளது என்று கிளப்பிவிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











