பாட்டில் தண்ணீரை உடம்பு மேலே ஊற்றி.. மேடையிலேயே ஆபாச நடனமா?.. பாடகியை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்

மும்பை: பிரபல பாலிவுட் பாடகி நேஹா கக்கர் மீண்டும் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளார். இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் தளங்களில் அவரது சமீபத்திய மேடை நிகழ்ச்சி ஒன்றின் வீடியோ பரவத் தொடங்கியதே இதற்குக் காரணம். இந்த சின்ன வீடியோ காணொளி குறித்து ரசிகர்கள் சிலர் நேஹாவின் துணிச்சலைப் பாராட்டி வருகிறார்கள். அதே நேரத்தில், நெட்டிசன்கள் சிலர் பொது நிகழ்ச்சிகளில் அதிக கட்டுப்பாடு தேவை என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

நேஹா கக்கரின் இந்த வைரல் வீடியோ, ஒரு பிரம்மாண்டமான லைவ் கச்சேரியின்போது நடைபெற்ற சம்பம் தான். அதிர வைக்கும் இசையின் மத்தியில், அவர் ஒரு சிறுத்தை தோல் வடிவ உடையை அணிந்து அட்டகாசமாக ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் இருந்தார் அவர். அவரது உடைகள், அதற்கு ஏற்றவாரு அவர் வலைந்து நெளிந்து ஆடியவை எல்லாம் ரசிகர்கள் மத்தியில் ஆராவாரப்படுத்தப்பட்டது.

இந்த வீடியோவில் அதிகம் பேசப்படும் விஷ்யம் என்னவென்றால், நேஹா கக்கர் ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்து தனது உடலின் மேற்பகுதியில் ஊற்றுவதுதான். ஒரு கையை உயர்த்தியவாறே அவர் தொடர்ந்து நடனமாட, தண்ணீர் உடல் முழுவதும் வழிந்தோடியது. இந்த கவர்ச்சியான நடன அசைவுகளை கவனித்த சில நெட்டிசன்கள் இவரது நடனங்கள் ஆபாசமாக இருப்பதாகவும் பாலியல் சார்ந்த நடனமாக இருப்பதாகவும் பதிவிட்டு வருகிறார்கள்.

Neha Kakkar Viral Live Show Controversy Sparks Body Positivity Debate

ஆபாச நடனமா?: சமூக வலைதளங்களில், நேஹா கக்கரின் இந்த வீடியோவுக்கு அவரது தீவிர ரசிகர்கள் பாராட்டு மழையையும், ஏராளமான ஈமோஜிக்களையும் அன்பின் மிகுதியால் வாரி வழங்கி வருகிறார்கள். "நேஹாவைப்போல் இந்த மேடையை வேறு யாரும் சொந்தமாக்க முடியாது!" என்று ஒரு ரசிகர் குறிப்பிட்டிருந்தார். பல தளங்களில் இக்காணொளியைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை 10 மில்லியனைத் தாண்டின.

எதிர்மறை விமர்சனம்: எனினும், இந்த காணொளிக்கு எதிர்மறை விமர்சனங்களும் விரைவாகவே குவிந்தன. சில பயனர்கள் இந்த நடன அசைவுகளை 'அநாகரிகமானது' மற்றும் 'அளவுக்கு மீறியது' என்று முத்திரை குத்தி வருகிறார்கள். நேஹா கக்கர் "லைக்ஸ்" பெறுவதற்காகவே இப்படிச் செய்வதாகவும் சிலர் பதிவிட்டு வருகிறார்கள். பரவலாகப் பகிரப்பட்ட ஒரு பதிவில், "மெலடி ராணி என்று புகழப்பட்ட அவர் இப்படிச் செய்துள்ளது, அருவருப்பின் உச்சம்" என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

ஆண் பாடகர்: மற்றொரு ரசிகர், "ஒரு சிறந்த பாடகி என்ற அவரது மரியாதையை கெடுத்துக் கொள்கிறார் " என்று வருத்தமாக பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் பாடகியின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிப்பவர்களை நோக்கி சில இணையவாசிகள், இதே போல் ஒரு ஆண் பாடகர் செய்திருந்தால் இந்த கேள்வி முன் வைக்கப்பட்டிருக்குமா என்றும் கேள்வி எழுப்பி வருகிறாரக்ள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X