ஒன்னுன்னாலே தாங்க முடியாது.. 2 நடிகைகள்னா.. வைரலாகும் அக்கா தங்கை நடிகைகளின் ஒர்க் அவுட் போட்டோ!

By

சென்னை: பிரபல அக்கா தங்கை நடிகைகள் வெளியிட்டுள்ள ஒர்க் அவுட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Recommended Video

Reshma Pasupuleti Stunning dance moves, Star Sunita, Preethi sharma | Lock down Diaries

லாக்டவுன் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், நடிகர், நடிகைகளும் வீட்டுக்குள் இருக்கின்றனர்.

அவர்களது தற்போதைய ஒரே பொழுதுபோக்கு சமூக வலைத்தளங்கள். தங்களது பெரும்பாலான நேரத்தை அதில்தான் செலவிடுகின்றனர்.

சமையல், நடனம்

சமையல், நடனம்

தங்கள் வீடுகளில் இருந்தபடி, சமையல், நடனம் உள்ளிட்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் அதில் வெளியிட்டு வருகின்றனர். பெரும் வசதிகொண்ட பிரபல நடிகைகள், தங்கள் வீட்டுக்குள்ளேயே ஜிம் உள்ளிட்ட வசதிகளை வைத்துள்ளனர். அதில் அவர்கள் செய்யும் ஒர்க் அவுட்டை புகைப்படம் எடுத்து பதிவு செய்கின்றனர்.

நடிகை நேகா சர்மா

நடிகை நேகா சர்மா

சிலர் தங்களது த்ரோபேக் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றனர். அப்படி படங்களை வெளியிடும் நடிகைகளில் ஒருவர் நடிகை நேகா சர்மா. இவர் அடிக்கடி தனது ஹாட் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அதற்கு நெட்டிசன்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவிப்பார்கள். கமென்ட்களும் சரமாரியாக வரும்.

தெலுங்கு, இந்தி

தெலுங்கு, இந்தி

இவர், தமிழில், பிஜோய் நம்பியார் இயக்கிய அந்தாலஜி படமான, 'சோலோ'வில் நடித்திருந்தார். தெலுங்கில் ராம்சரண் தேஜாவுடன் சிறுத்தா, வருண் சந்தேஷுடன் குர்ராடு படங்களில் நடித்துள்ளார். இந்தியில் யங்கிஸ்தான், முபாரகன், தன்ஹாஜி உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார். இப்போதும் நடித்து வருகிறார்.

சத்யமேவ ஜயதே

சத்யமேவ ஜயதே

இவரது சகோதரி ஐசா சர்மா. இவர் இந்தியில் வெளியான சத்யமேவ ஜயதே படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இதில், ஜான் ஆபிரஹாம், மனோஜ் பாய்பாய் உட்பட பலர் நடித்திருந்தனர். இவர் தனது கிளாமர் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது வழக்கம். இப்போது அக்கா, தங்கை நடிகைகள் இணைந்து செய்யும் ஒர்க் அவுட் போட்டோவை வெளியிட்டுள்ளனர்.

மிரட்டும் சகோதரிகள்

மிரட்டும் சகோதரிகள்

இதற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்துள்ளனர். பலர், ரெண்டு பேருமே செம அழகு என்று வர்ணித்துள்ளனர். அழகு, ஹாட் இரண்டிலும் மிரட்டும் சகோதரிகள் என்று சர்டிபிகேட் கொடுத்துள்ளார் ஒருவர். உங்களுக்கெல்லாம் வயசே ஆகாதா? அப்படியே இருக்கீங்களே? என்று ஒரு நெட்டிசன் ஆச்சரியமாகக் கேட்டுள்ளார்.

தாங்க முடியாது

தாங்க முடியாது

செல்லாது செல்லாது, மாஸ்க்கை காணலையே.. இதை ஏத்துக்க முடியாது? என்று ஒருவர் கிண்டலடிக்க இன்னொருவர், நீங்க என்ன ட்வின்ஸா என்று கேட்டுள்ளார். நேகாவை விட, ஐசா கியூட்டா இருக்காங்க இல்ல என்று ஒரு நெட்டிசன் கேட்டுள்ளார். ஒருத்தங்க ஒர்க் அவுட் போட்டோ போட்டாலே தாங்க முடியாது, இப்ப ரெண்டு பேருமா? என்று சிலர் ஆச்சரியமாகக் கூறியுள்ளனர். இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X