Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
விஜய் சேதுபதியின் ஜுங்காவில் 2வது ஹீரோயினாக நடிக்கிறாரா நேகா ஷர்மா?
விஜய் சேதுபதியின் ஜுங்கா படத்தில் நடிகை நேகா ஷர்மா இரண்டாவது ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: விஜய் சேதுபதியின் ஜுங்கா படத்தில் நடிகை நேகா ஷர்மா இரண்டாவது ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'காஷ்மோரா' படத்தைத் தொடர்ந்து கோகுல் இயக்கவுள்ள புதிய படம் ஜுங்கா. விஜய் சேதுபதி 20 கோடி ரூபாய் செலவில் இந்தப் படத்தை தயாரித்து ஹீரோவாக நடிக்கிறார். சாயிஷா சைகல், யோகி பாபு ஆகியோர் நடிப்பில் இந்தப் படம் உருவாகி வருகிறது.
இப்படத்துக்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். ஜுங்கா படத்தில் இரண்டு ஹீரோயின்கள் என ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் இரண்டாவது ஹீரோயினாக நடிகை நேகா ஷர்மாவை ஒப்பந்தம் செய்ய படக்குழு அணுகியுள்ளது.
இதற்கு நேகா ஷர்மா ஒப்புதல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தேதி இன்னும் முடிவாகவில்லை என்று தெரிகிறது. ஆனால் நேகா ஷர்மா தொடர்பான காட்சிகளை டிசம்பர் அல்லது ஜனவரியில் காட்சியாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
இரண்டாவது ஹீரோயின் ரோலில் நேகா ஷர்மா பாவடை தாவனி கெட்டப்பில் நடிக்கவுள்ளாராம். இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலாகுமாரா படத்திற்குப் பிறகு இணைந்துள்ள விஜய்சேதுபதி - கோகுல் கூட்டணியில் உருவாகும் ஜுங்காவில் விஜய் சேதுபதி டான் ஆக நடிக்கிறார். யோகி பாபு காமெடி ரோலில் நடிக்கவுள்ளார்.