இதைப் பார்த்தா, ஒர்க் அவுட்டுக்காக போட்ட மாதிரி தெரியலையே... வைரலாகும் நடிகையின் எக்சர்சைஸ் வீடியோ

By

மும்பை: நடிகை நேகா சர்மா புதிதாகப் பதிவிட்டுள்ள ஒர்க் அவுட் வீடியோ வைரலாகி வருகிறது.

Recommended Video

Celebrities Quarantine | Shanthanu | KiKi | Dhruv Vikram

தமிழில், சோலோ, தெலுங்கில் ராம்சரண் தேஜாவுடன் சிறுத்தா, வருண் சந்தேஷுடன் குர்ராடு படங்களில் நடித்தவர், நேகா சர்மா.

இந்தியில் பல படங்களில் நடித்துள்ள இவர், சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஹாட் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

தனி ரசிகர் கூட்டம்

தனி ரசிகர் கூட்டம்

இதைப் பார்ப்பதற்காகவே இவருக்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு. கிளாமர் ஸ்டில்களை பதிவிடுவதற்காக இன்ஸ்டாகிராமை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் நடிகைகளில் இவரும் ஒருவர். இவரது சமூக வலைத்தளப் பக்கங்களைப் பார்த்தால், கொட்டிக்கிடக்கிறது ஹாட் போட்டோஸ். இதற்காகவே இவருக்கு ஏராளமான பாலோயர்கள்.

காதலிக்க மாட்டீங்களா?

இவரது போட்டோக்களை கண்டு ரசிகர்கள் கண்டபடி வழிந்து, ஏங்கி, புகழ்ந்து, வர்ணித்து கமென்ட் போடுவார்கள். சிலர் என்னை காதலிக்க மாட்டீங்களா? கல்யாணம் பண்ணிக்கலாமா என்கிற ரிதீயில் போடும் கமென்ட்களும் அதிகம். இதை ரசிப்பதற்காகவே இப்படியான புகைப்படங்களை நேகா சர்மா பதிவிடுவார் போலிருக்கிறது. இவர் நேற்று இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்த போட்டோ, படுகிளாமராக இருந்தது.

வொர்க் அவுட் வீடியோ

வொர்க் அவுட் வீடியோ

இதற்கு ஏராளமான ரசிகர்கள் கமென்ட் அடித்திருந்தனர். இந்நிலையில் வீட்டு பால்கனியில் இருந்து ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார், இப்போது. அந்த வீடே அழகாக இருக்கிறது. அதில் நேகாவும் அவர் சகோதரியும் செய்யும் ஒர்க் அவுட் வீடியோ கிளாமராக இருக்கிறது. கடைசியாக இருக்கும் வீடியோவில் அவர்கள் வீட்டுக்குள்ளேயே ஓடுகிறார்கள். அவர்களுடன் அவர்களின் செல்ல நாய்க்குட்டியும் ஓடுவது ரசிக்கும்படி இருக்கிறது.

எனக்கொரு டவுட்?

இதற்கும் பலர், விதவிதமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். 'இப்படியொரு அழகான வீடு இருந்தா, நான் அதை விட்டு எங்கயும் போகமாட்டேன்' என்று தெரிவித்துள்ளார் ஒருவர். ஒரு ரசிகர், 'எனக்கொரு டவுட்? எப்பவும் கூடவே ஒரு கேமராமேனை வச்சிருப்பீங்களோ?' என்று கேட்டுள்ளார். இன்னொருவர், அடுத்த ஜென்மத்துல உங்க பக்கத்து வீட்டுல இருக்கணும் என்று ஏங்கி இருக்கிறார். இன்னும் சிலர், இதை ஒர்க் அவுட்டுக்கான போட்ட மாதிரியே தெரியலையே' என்று கேட்டிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X