»   »  பக்கத்து வீட்டு பெண்ணை லைட்டா கடிச்சேன், ஆனால்...: ஜாங்கிரி மதுமிதா விளக்கம்

பக்கத்து வீட்டு பெண்ணை லைட்டா கடிச்சேன், ஆனால்...: ஜாங்கிரி மதுமிதா விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
பக்கத்து வீட்டு பெண்ணின் கையை கடித்துக் குதறிய பிரச்சினை-வீடியோ

சென்னை: பக்கத்து வீட்டு பெண்ணை கடித்தது தொடர்பாக நகைச்சுவை நடிகை மதுமிதா விளக்கம் அளித்துள்ளார்.

நகைச்சுவை நடிகை மதுமிதா தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் உஷா என்பவரை கடித்துக் குதறியதாக செய்திகள் வெளியாகின. இதை பார்த்த மதுமிதா இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது,

சினிமா

சினிமா

நான் திரைக்கு வந்த இத்தனை ஆண்டுகளில் என்னை பற்றிய நல்ல விஷயங்களை தான் கேள்விப்பட்டிருப்பீர்கள். முதல் முறையாக என்னை பற்றிய தவறான விஷயம் தவறான நபரால் பரப்பப்படுகிறது.

அபார்ட்மென்ட்

அபார்ட்மென்ட்

இந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்து கிட்டத்தட்ட 6 மாதம் ஆகிறது. எனக்கு ஆக்டிங் டிரைவராக வந்தவர் பாலாஜி என்பவர். அப்போ நான் வாடகை வீட்டில் இருந்தேன்.

வீடு

வீடு

வளசரவாக்கத்தில் நல்ல அபார்ட்மென்ட் உள்ளது மேடம் என் மனைவி உஷா தான் புரோக்கராக இருக்கிறார், வீடு வாங்குங்க, அவர் நல்ல விலைக்கு முடித்துக் கொடுப்பார் என்றார் பாலாஜி. அவர் பேச்சை கேட்டு வீடு வாங்கினேன்.

கமிஷன்

கமிஷன்

வீடு வாங்க கமிஷனாக ரூ. 60 ஆயிரம் நான் அவர்களுக்கு கொடுத்திருக்கிறேன். அந்த குடியிருப்பில் உஷாவையும் சேர்த்து 5 பேர் இருக்கிறோம். உஷா தான் மெயின்டனன்ஸை பார்த்து வருகிறார்.

குளறுபடி

குளறுபடி

மெயின்டனன்ஸில் குளறுபடி நடப்பதாக உணர்ந்து மீட்டிங் வச்சோம். இந்த குடியிருப்பில் உள்ளவர்களை பற்றி உஷா என்னிடம் தவறாக கூறியது நாங்கள் அனைவரும் சந்தித்த அந்த மீட்டிங்கில் தெரிய வந்தது. மெயின்டனன்ஸை கீழ் வீட்டு டீச்சரிடம் கொடுத்த பிறகு உஷா பல பிரச்சனைகளை கொடுத்தார். அதன் பிறகே போலீசில் புகார் கொடுக்க முடிவு செய்தோம்.

டீச்சர்

டீச்சர்

டீச்சரோ முன்பும் நாங்கள் போலீசில் புகார் கொடுக்க முயன்றபோது உஷா என்னை அடித்து என் கணவர் மீது வீண் பழி போட்டார் என்றார். இருப்பினும் நாங்கள் உஷா மீது போலீசில் புகார் கொடுத்தோம். போலீசார் உஷாவை அழைத்து எச்சரித்தனர்.

டார்ச்சர்

டார்ச்சர்

அதன் பிறகு உஷாவின் டார்ச்சர் அதிகமானது. நாங்க கன்னடக்காரங்க எங்க கிட்ட சின்னதா வச்சுக்கிட்டாவே பெருசா அடிப்போம் எங்க மீதா புகார் கொடுக்கிறீங்க என்றார் உஷா.

போலீஸ்

போலீஸ்

காவல் துறை உயர் அதிகாரி விசாரித்த போதே உஷா என்னையும் அவரையும் சேர்த்து வைத்து பேசி என்னை அடித்தார். அப்போது வேறு வழியில்லாமல் நான் உஷாவை லைட்டா கடித்தேன். அதன் பிறகு உஷா என்னை கேட்டில் இடித்து காயப்படுத்தினார்.

காயம்

காயம்

நான் கடித்த இடத்தை உஷா குத்திக் குத்தி மேலும் காயப்படுத்திக் கொண்டார். உஷாவின் டார்ச்சரை ஒரு மாத காலமாக பொறுத்துக் கொண்டது தான் நான் செய்த தவறு என்கிறார் மதுமிதா.

English summary
Actress Madhumitha has given a detailed explanation about biting her neighbour Usha.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil