15 வயசு பொண்ணு மாதிரி நடந்துக்கோ.. இப்படி இஷ்டத்துக்கு டிரெஸ் பண்ணாத.. அனிகாவை அதட்டும் நெட்டிசன்ஸ்
சென்னை: குட்டி நயன்தாரான்னு ரசிகர்கள் கொஞ்ச ஆரம்பித்த உடன், இஷ்டத்துக்கு போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தை நிரப்பி வருகிறார் அனிகா சுரேந்திரன்.
இளவரசி போல உடை அணிந்து கொண்டு, தற்போது அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
பாராட்டி பல கமெண்ட்டுகள் வந்தாலும், இந்த வயசுல உனக்கு இது தேவையா? என்றும் சில நெட்டிசன்கள் கண்டித்தும் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

குழந்தை நட்சத்திரம்
மலையாளம், தமிழ் உள்ளிட்ட சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து கலக்கி வருபவர் அனிகா சுரேந்திரன். தல அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் படங்களில் அவருக்கு மகளாக நடித்து பிரபலமானார். ரம்யா கிருஷ்ணன் நடித்த குயின் வெப்சீரிஸிலும் நடித்து பட்டையை கிளப்பினார்.

செம போல்டு
லக்ஷ்மி எனும் குறும்படத்தை இயக்கி சர்ச்சையை கிளப்பிய இயக்குநர் சர்ஜுன், இயக்கத்தில் அடுத்ததாக வெளியான ‘மா' குறும்படத்தில் லீடு ரோலில் செம போல்டாக நடித்து பாராட்டுக்களை அள்ளி இருந்தார் அனிகா சுரேந்திரன். 15 வயதாகும் இவர், விரைவிலே ஹீரோயினாகவும் நடிக்க ரெடியாகி விட்டார்.

கிளாமர் போட்டோஷூட்
அதற்கு தயாராகும் விதமாக ஏகப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்து அதிர வைத்து வருகிறார் அனிகா சுரேந்திரன். சின்ன பெண்ணான இவர், இளைஞர்களை கவரும் வகையில் ஏகப்பட்ட அழகான கவர்ச்சி போட்டோஷூட்களை நடத்தி வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட ஓணம் போட்டோஷூட் புகைப்படங்கள் எல்லாம் பல இளைஞர்களின் மொபைல் வால் பேப்பராக மாறியது குறிப்பிடத்தக்கது.

குட்டி நயன்தாரா
நடிகை நயன்தாராவுடன் இணைந்து பாஸ்கர் தி ராஸ்கல், நானும் ரவுடி தான், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அனிகா சுரேந்திரனை, ரசிகர்கள் குட்டி நயன்தாரா என்றே அழைத்து வருகின்றனர். அவரும், நடிகை நயன்தாரா போலவே சேஞ்ச் ஓவர் ஆகி எடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களும் இணையத்தை கலக்கின.

இளவரசி போல
இந்நிலையில், தற்போது இளவரசியை போன்ற ராயல் லுக்கில் அனிகா சுரேந்திரன் எடுத்துள்ள அட்டகாசமான புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யத்தில் மெய் மறந்து போயுள்ளனர். அவரது இந்த புகைப்படத்தை பாராட்டி ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

15 வயசு பொண்ணு மாதிரி நடந்துக்கோ
அதே சமயம் வயதுக்கு மீறிய கவர்ச்சி போட்டோஷூட்களை அனிகா நடத்துகிறார் என்ற பேச்சும் அடிபட்டு வருகிறது. அனிகாவின் இந்த லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ஒரு நெட்டிசன், "ஹே இடியட்.. 15 வயசு பொண்ணு மாதிரி நடந்துக்கோ.. இப்படி இஷ்டத்துக்கும் போட்டோ போடாதே.. என கண்டித்து கமெண்ட் போட்டுள்ளார். மேலும் சில நெட்டிசன்கள், உங்களை போன்றவர்களால் தான் இளம் பெண்கள் கெட்டுப் போகின்றனர் என கண்டபடி திட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











