twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நேர்கொண்ட பார்வை இக்காலத்திற்கு அவசியம் தேவை-துணை காவல் ஆணையர் நெல்லை

    |

    சென்னை: பெண்களின் அனுமதியில்லாமல் நடக்கும் அனைத்தும் குற்றமே என்ற அழுத்தமான செய்தியை லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள நடிகர் அஜீத்குமார் போன்றவர்கள் கூறும்போது ஏராளமானவர்களை சென்றடையும் என்று நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்த நெல்லை மாநகர துணை காவல் ஆணையர் அர்ஜூன் சரவணன் பாராட்டியுள்ளார்.

    நடிகர் அஜித்குமார் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அனைத்து துறைகளிலும் மிக வேகமாக முன்னேறி வரும் பெண்கள், தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் பாலியல் சீண்டல்கள் மற்றும் அவர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளை சட்டத்தின் துணையுடன் எவ்வாறு எதிர்கொள்வது என்பதை நன்கு விளக்கி, திரைப்படத்தை பார்க்கும் அனைவருக்கும் பல புதிய கருத்துகளை புகுத்தியுள்ளது இத்திரைப்படம்.

    Nellai Deputy Commissioner of Police commended Nerkonda Paarvai film

    நடிகர் அஜித்குமார் அவர்களின் திரைப்பயணத்தில் இத்திரைப்படம் புதிய மைல்கல் என்றே சொல்லலாம். பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டேவின் நடிப்பும், தொழில்நுட்ப கலைஞர்களின் பணியும் பாராட்டத்தக்கது. சட்டத்தை நிலை நிறுத்துவதில் வழக்கறிஞர்களின் கடமையை இயக்குநர் எச்.வினோத் மிகச் சிறப்பாக சுட்டிக்காட்டியுள்ளார். சமூக அக்கறையுள்ள இயக்குநர்களின் வரிசையில் இவர் முன் வரிசையில் அமர்ந்துவிட்டார்.

    நேர்கொண்ட பார்வை படத்தை பாராட்டியதோடு தமிழக காவல்துறை மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கைகளையும் குறிப்பிட்டுள்ளார். அதில்

    •பெண்கள் பாதுகாப்பிற்காக தமிழக காவல்துறை காவலன் எஸ்ஒஎஸ் (KAVALAN SOS) என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதனை பதிவிறக்கம் செய்வதன் மூலம் எந்த ஒரு அவசர நிலையிலும் ஒரு க்ளிக் மூலம் காவல்துறை உதவியைக் கோர முடியும். மேலும், நீங்கள் தேர்ந்தெடுக்கும் 5 பேருக்கும் அவசர உதவி கோரி குறுந்தகவல் செல்லும்.

    •பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரையோ புகைப்படத்தையோ காவல்துறை மற்றும் ஊடகங்கள் வெளியிட தடை உள்ளது. பெயர் மற்றும் புகைப்படம் வெளியாகும் என்று எண்ணியே பலர் புகார் அளிப்பதில்லை.

    •குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளில் மரண தண்டனை அளிக்கும் போக்சோ சட்டம் (Protection of Children from Sexual Offences Act) நிறைவேற்றியுள்ளது. எனவே இனிமேல் இவ்வழக்குகளில் ஜாமீன் கிடைப்பதும் கடினம்.

    •தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை (Crime against women) விசாரிக்க தனிப்பிரிவு செயல்படுகிறது.

    •அனைத்து காவல் நிலையங்களிலும் சீருடை அணியாத குழந்தை நல அலுவலர்கள் ( Child friendly Police officers) பணியில் உள்ளனர்.

    •பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்டவர் யார், எவர், அவரது பின்னணி மற்றும் சூழல் பார்க்காமல் அவர்கள் அனுமதியில்லாமல் நடக்கும் எதுவுமே குற்றமே என்ற அழுத்தமான செய்தியை லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட அஜித்குமார் போன்றோர் கூறும்போது ஏராளமானவர்களை சென்றடையும்.

    பெண் குழந்தைகள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்வதை விட, ஆண் குழந்தைகள் அவர்களை எப்படி மதிக்க வேண்டும் என்று சொல்லி வளர்ப்பதே தற்போதைய தேவை. நேர்கொண்டபார்வை இக்காலத் தேவை

    அர்ஜுன் சரவணன் டெபுடி கமிஷனர் ஆஃப் போலீஸ், நெல்லை

    நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்த பல்வேறு தரப்பினருமே படத்தை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழக காவல்துறையில் உள்ளவர்களே பாராட்டி இருப்பது அஜீத்குமார் ரசிகர்களுக்கு அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அஜீத்குமார் இனிமேல் நடிக்கும் படங்களும் சமூக அக்கறை உள்ள படங்களாகவே இருக்கவேண்டும் என்று அவருடைய ரசிகர்களும் பெண்களும் எதிர்பார்க்கிறார்கள்.

    English summary
    The victim of crimes against women, whoever is their background, Ajith Kumar, who has millions of fans, has reached the point where he is under pressure to say that anything they do without their permission is a crime.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X