'தெறி' 58-நாள்ல பண்ணினத 'மெர்சல்' பத்தே நாள்ல பண்ணிடுச்சு... -வெற்றிவிழா கொண்டாடும் பிரபல தியேட்டர்!
நெல்லை : விஜய்யின் 'மெர்சல்' திரைப்படம் வெளியான எல்லா இடங்களிலும் நல்ல வசூல் ஈட்டி வரும் நிலையில், நெல்லையில் ஒரு பிரபல திரையரங்கம் வெற்றி விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
மெர்சல் திரைப்படம் பல பிரச்னைகளைத் தாண்டி வெளியாகி உலகம் முழுவதும் ரசிகர்களின் செம ரெஸ்பான்ஸோடு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இரண்டாவது வாரத்திலேயே பல திரைப்படங்களின் கலெக்ஷன் ஹிஸ்டரியை முந்திச் சாதனை படைத்து வரும் நிலையில் நெல்லை ராம் முத்துராம் திரையரங்க நிர்வாகி ட்வீட் செய்துள்ளார்.
ப்ளாக்பஸ்டர்
விஜய்யின் ப்ளாக்பஸ்டர் ஹிட்டான 'தெறி' படம் 58 நாட்களில் கலெக்ஷன் செய்ததை 'மெர்சல்' 10 நாட்களிலேயே வசூலித்திருக்கிறது. மெகா ப்ளாக்பஸ்டர்!
எல்லாப் படமும் ஹிட்டா
தியேட்டர் நிர்வாகி பின்வருமாறு ட்வீட் செய்திருக்கிறார். 'நீங்கள் எல்லா படத்தையும் ஹிட் என்று தான் சொல்கிறீர்கள்... எந்தப் படம் தான் உண்மையான ஹிட் என எனது நண்பர் ஒருவர் கேட்டார். எனக் கூறி அதற்கு பதில் அளித்துள்ளார்.
ப்ரொமோஷன் மட்டும்தான்
எல்லாப் படங்களும் ஹிட் ஆக வேண்டுமென்றுதான் ப்ரொமோட் செய்கிறோம். ஆனால், அவற்றில் ரசிகர்கள் விரும்பும் படங்கள் ஹிட் ஆகின்றன. மற்றவை ஹிட் ஆகாமல் தோற்று விடுகின்றன. என விளக்கம் அளித்துள்ளார்.
சைலண்டா இருப்போம்
'உண்மையான வெற்றியாக இருந்தால் சத்தமாக கொண்டாடுவோம், இல்லை என்றால் அமைதியாக இருப்போம்' எனத் தெரிவித்துள்ளார். மேலும், 'மெர்சல்' படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் இன்று காலை நடைபெறவிருப்பதாகவும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











