லோக்சபா தேர்தல் 2019: சர்கார் விஜய்யாக மாறிய வாக்காளர்.. என்ன செய்தார் தெரியுமா?
விஜயின் சர்கார் பட பாணியில், 49 P தேர்தல் விதிப்படி நெல்லையில் ஒருவர் வாக்களித்துள்ளார்.
Recommended Video
சென்னை: நெல்லையைச் சேர்ந்த வாக்காளர் ஒருவர் விஜயின் சர்கார் பட பாணியில், 49 P தேர்தல் விதிப்படி வாக்களித்துள்ளார்.
விஜய் நடிப்பில் A .R முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த சர்கார் திரைப்படம் வெற்றியையும் , வசூல் சாதனையும் படைத்த படம். இந்த படத்தில் ஒருவர் ஓட்டை மற்றொருவர் கள்ள ஒட்டு போட்டுவிட்டால் , 49 P தேர்தல் விதிப்படி தேர்தல் அலுவரின் உத்தரவின் பேரில் வாக்களிக்கலாம் என்ற செய்தி மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்பட்டது.
இந்த நிகழ்வு தற்போது நெல்லை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.

மக்களவை தேர்தல்
மக்களவை தேர்தல் தமிழகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் வாக்களித்தனர். தமிழகத்தில் மொத்தல் 71 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றது.

இயந்திரக் கோளாறு
ஒரு சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் வாக்குப்பதிவு தாமதமானது. சில இடங்களில் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இல்லை என்ற புகாரும் எழுந்தது.

கள்ள ஓட்டு பிரச்சினை
இந்நிலையில், நெல்லை மாவட்டம் பணகுடியில் அமைப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் மணிகண்டன் என்பவருடைய ஓட்டை மற்றறொருவர் கள்ள ஒட்டு போட்டதாக புகார் எழுந்தது. தன்னுடைய ஓட்டை மற்றொருவர் எப்படி போடலாம் என மணிகண்டன் தட்டிக்கேட்டார்.

சர்கார் பாணியில்
இதையடுத்து, ,மணிகண்டனுக்கு 49 P தேத்தல் விதிப்படி வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது. அவர் தனது உரிமையை நிலைநாட்டினார். இது சர்கார் படத்திற்கு கிடைத்த உண்மையான வெற்றி என்று விஜய் ரசிகர்கள் பெருமையாக பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











