Nelson: அட்லீயை ஓவர்டேக் செய்த நெல்சன்... அல்லு அர்ஜுனுடன் புதிய கூட்டணி... அடுத்த சம்பவமா..?

சென்னை: கோலமாவு கோகிலா திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நெல்சன்.

அதன் பின்னர் டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் என அடுத்தடுத்து 3 படங்களை அசுர வேகத்தில் இயக்கி முடித்துவிட்டார்.

நெல்சன் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான ஜெயிலர், இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்தது.

இதனையடுத்து நெல்சன் அடுத்தப் படம் குறித்த எதிர்பார்ப்பு காணப்பட்ட நிலையில், தற்போது அதுபற்றி அப்டேட் கிடைத்துள்ளது.

 Nelson: Allu Arjun to join hands with Nelson for his next movie

அல்லு அர்ஜுனுடன் இணையும் நெல்சன்: கோலிவுட்டில் இந்தாண்டின் இன்டஸ்ட்ரி ஹிட் படமாக அமைந்துள்ளது ரஜினியின் ஜெயிலர். சூப்பர் ஸ்டார், இயக்குநர் நெல்சன் கூட்டணியில் உருவான ஜெயிலர், பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதனால், ரஜினியின் அடுத்தடுத்த படங்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. ஜெயிலர் படம் மூலம் ரஜினி மட்டும் இல்லாமல், இயக்குநர் நெல்சனும் கம்பேக் கொடுத்துள்ளார்.

கோலமாவு கோகிலா திரைப்படம் மூலம் இயக்குநரான நெல்சனுக்கு, இரண்டாவது படமாக வெளியான டாக்டர் தான் பெரிய அடையாளம் கொடுத்தது. நெல்சனின் நெருங்கிய நண்பனான சிவகார்த்திகேயன் தான் டாக்டர் படத்தின் ஹீரோவாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. டாக்டர் வெற்றியை பார்த்தே, விஜய்யின் பீஸ்ட், ரஜினியின் ஜெயிலர் என இரண்டு படங்களை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைத்தது.

இதில் விஜய்யின் பீஸ்ட் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றாலும், பாக்ஸ் ஆபிஸில் முதலுக்கு மோசமில்லாமல் வசூலித்தது. ஆனால், சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர், நெல்சனுக்கு தரமான கம்பேக்காக அமைந்துள்ளது. தலைவரின் ஃபேன் பாய் சம்பவமாக ஜெயிலர் படத்தை செதுக்கியுள்ளார் நெல்சன். கலவையான விமர்சனங்களுடன் பாக்ஸ் ஆபிஸிலும் 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது ஜெயிலர்.

இதனால், நெல்சனுக்கு பல முன்னணி ஹீரோக்களிடம் இருந்து ஆஃபர்கள் சென்றதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், தற்போது டோலிவுட் மாஸ் ஹீரோ அல்லு அர்ஜுனை நேரில் சந்தித்துள்ளாராம் நெல்சன். புஷ்பா 2ம் பாகத்தில் நடித்து வரும் அல்லு அர்ஜுன், தனது அடுத்தப் படத்திற்காக கதை கேட்டு வருகிறார். ஜவான் படத்தின் வெற்றியைப் பார்த்து மிரண்டு போன அல்லு அர்ஜுன், அடுத்து அட்லீயுடன் இணையவிருப்பதாக சொல்லப்பட்டது.

இதனிடையே தற்போது நெல்சனை சந்தித்து அவரிடம் கதை கேட்டுள்ளாராம். அதன்படி, நெல்சன் சொன்ன கதைக்கு அல்லு அர்ஜுனும் ஓக்கே சொல்லிவிட்டதாகத் தெரிகிறது. இதனால், விரைவில் நெல்சன் - அல்லு அர்ஜுன் கூட்டணி பற்றிய அபிஸியல் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதும் கன்ஃபார்ம் ஆகியுள்ளது. இன்னொருபக்கம் அட்லீ - அல்லு அர்ஜுன் கூட்டணி பற்றியும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X