படம் ஃபுல்லா ரஜினி சார் தான்.. தமன்னாவுக்கு தனி ஸ்டெப்.. நெல்சன் - ரெடின் கிங்ஸ்லி ரகளை பேட்டி!

சென்னை: சன் டிவியில் சமீபத்தில் ஜெயிலர் படத்தின் சிறப்பு பேட்டியாக வெளியான நெல்சன், ரெடின் கிங்ஸ்லி மற்றும் ஜாஃபர் பேட்டி ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தி வருகிறது.

வீட்டுக்கு வெளியில ரெண்டு ரோல்ஸ் ராய்ஸ் நிக்குதுன்னு கேள்விப்பட்டேன் என்பதில் தொடங்கி, படம் முழுக்க ரஜினி சார் தான் நிறைஞ்சிருந்தாரு என ரெடின் கிங்ஸ்லி நெல்சன் உடன் இணைந்து ரகளை செய்வதே மிகப்பெரிய அலப்பறையாக அமைந்து விட்டது.

Nelson and Redin Kingsley fun interview after Jailer collects huge at Box Office

காவாலா பாட்டுல என்னை ஆட விடாமல், தொப்பி மாட்டி ஜோல்னா பையை கொடுத்து நிக்க வச்சிட்டியே ஏன் என கேட்டு நெல்சனை பங்கம் செய்து விட்டார் ரெடின் கிங்ஸ்லி.

ரோல்ஸ் ராய்ஸ் வந்துடுச்சா: ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற நிலையில், நெல்சனுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் கிஃப்ட்டாக வந்து விட்டதா என ரெடின் கிங்ஸ்லி அந்த பேட்டியில் பேச, ECR வரை ஒரு ரவுண்டு அடிச்சிட்டு மறுபடியும் அவங்க ஆபிஸ்லயே வேணா விட்ரலாம் என கலகலப்பாக பேசினார் நெல்சன்.

Nelson and Redin Kingsley fun interview after Jailer collects huge at Box Office

எதுவும் கிப்ட் கொடுக்கலையான்னு ரெடின் கேட்க, எல்லாருக்கும் டிவி கொடுக்கிறாங்களாம். சொல்லியிருக்காங்க என கவுன்டர் கொடுத்துக் கொண்டே ரசிகர்களை சிரிக்க வைத்தார் நெல்சன்.

1000 கோடி வந்துடும்ல: 400 கோடி வசூல் வந்துடுச்சு, நீ பண்ண படத்துலயே இதுதான் அதிக வசூல் என ரெடின் கிங்ஸ்லி சொன்னதும், 375 கோடி தான்னு அவங்களே சொல்லியிருக்காங்க.. இன்னும் 20 கோடி தான ஒரு ஷோவுல வந்துடப்போகுது. 1000 கோடி வந்துடும்ல என ரெடின் கேட்க, என்னை ஏன் கேட்குற, எனக்கு எப்படி தெரியும். நல்லா வசூல் பண்ணும், அதுமட்டும் போதும் என அங்கிருந்து எஸ்கேப் ஆகி விட்டார் நெல்சன்.

Nelson and Redin Kingsley fun interview after Jailer collects huge at Box Office

தமன்னாவுக்கு தனி ஸ்டெப்: காவாலா பாட்டுல தமன்னா டான்ஸ் நீ தான சொல்லிக் கொடுத்த என ரெடின் கிங்ஸ்லி சொல்ல, அது ஜானி மாஸ்டர் சொல்லிக் கொடுத்தார் என நெல்சன் பதிலளிக்க, ஜானி மாஸ்டர் என்ன சொன்னாரு, நீ என்ன ஸ்டெப் சொல்லிக் கொடுத்தனு எல்லாம் எனக்குத் தெரியும் என நெல்சனையே பங்கம் செய்து விட்டார் ரெடின் கிங்ஸ்லி.

படம் ஃபுல்லா ரஜினி சார் தான்: இந்த பேட்டியில் ரெடின் கிங்ஸ்லி மடியில் உட்கார்ந்துக் கொண்டு பேசிய நடிகர் ஜாஃபர் தனக்கான அங்கீகாரம், ரெஸ்பான்ஸ் எப்படி இருந்தது எனக் கேட்க, குறுக்கே புகுந்த ரெடின் கிங்ஸ்லி, படம் ஃபுல்லா ரஜினி சார் தான் தெரிஞ்சாரு.. அவர் நடந்து வருவது, அந்த சிகரெட் சீன் எல்லாம் தான் நிறைஞ்சிருந்தது. இதுல, நீ, நானெல்லாம் எம்மாத்திரம் என பேசி அலப்பறையை கிளப்பி விட்டார் ரெடின் கிங்ஸ்லி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X