தவறான முடிவை எடுத்த நெல்சன்.. தயாரிப்பாளரான முதல் படமே தோல்வி..வருத்தத்தில் கவின்!
சென்னை: பொதுவாக இரண்டு, மூன்று வெற்றிபடத்தை கொடுத்துவிட்டாலே நடிகர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு சினிமாவில் ஆசை வந்துவிடும். இதனால், சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிவிடுவார்கள். அப்படி தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய நெல்சன் திலீப்குமார் முதல் படத்திலேயே தலையில் துண்டுபோட்டுள்ளார்.
நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட், நடிகர் சிவகார்த்திகேயன் தனது பெயரில் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தை வைத்து இருக்கிறார். அதே போல இயக்குநர் பா ரஞ்சித், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்னனர். அந்த வகையில் நெல்சன் திலீப்குமார். ஃபிலமென்ட் பிக்சர்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனத்தின் முதல் படமான பிளடி பக்கர் தீபாவளிக்கு தியேட்டரில் வெளியானது.

பிளடி பக்கர்: இந்த படத்தில், கவினின் வித்தியாசமான நடிப்பில் வெளியான இந்த படத்தில் ரெடின் கிங்க்ஸி, சுனில் சுகதா, அக்ஷயா, திவ்யா, தனுஜ் ஆகியோர் நடித்துள்ளனர். சோம்பேறியான கவின், தனக்கு கண் தெரியாது, காது கேட்காது என பொய்யைச் சொல்லி பிச்சை எடுக்கிறார். ஆடம்பரமான மாளிகை ஒன்றில் ஒரு நாளாவது வாழ்ந்துவிட வேண்டும் என்ற கனவோடு இருக்கும் கவினுக்கு, அரண்மனையில் அன்னதானம் போடுவதாக தகவல் வர அங்கு செல்கிறான். சாப்பிட்டு முடித்த கையுடன் யாருக்கும் தெரியாமல் அந்த அரண்மனைக்குள் நுழைந்து விடுகிறார். அந்த கட்டிடத்தின் பிரம்மாண்டம் மற்றும் அழகை பார்த்து மயங்கிய கவின் யாருக்கும் தெரியாமல் அரண்மனையில் தங்குகிறான். அதன் பிறகு அந்த அரண்மனையில் என்ன நடந்தது என்பது தான் படத்தின் கதை.
முதல் படமே தோல்வி: இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் இயக்கி உள்ளார் இவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அமரன் படத்தால் இந்த படத்தின் வசூல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை வேறு ஒரு தேதியில் வெளியிட்டு இருந்தால் ஓரளவிற்காவது வசூலை பெற்று இருக்கும். கோலமாவு கோகிலா, டாக்டர், ஜெயிலர் என அடுத்தடுத்து வெற்றிப்படத்தை கொடுத்த நெல்சன் திலீப்குமார். தயாரிப்பாளராக அறிமுகமான முதல் படத்திலேயே மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளார். டாடா, ஸ்டார் என வெற்றிப்படத்தை கொடுத்த கவினுக்கும் இது தோல்வித் திரைப்படமாகவே அமைந்துள்ளதால்,அவரும் வருத்தத்தில் உள்ளார்.


Click it and Unblock the Notifications











