Epstein FIles: ஓ நெல்சா! அப்போ எப்ஸ்டீன் கதை தான் டாக்டர் படமா?.. வாயை பிளக்கும் ரசிகர்கள்!

சென்னை: நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு முதல் 100 கோடி படமாக அமைந்தது. அந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து பராசக்தி வரை பல 100 கோடி படங்களை சிவகார்த்திகேயன் சாதித்துள்ளார். ஆனால், விதை போட்டது நெல்சன் தான். அந்த டாக்டர் படத்தின் கதைக்கே விதை போட்டது உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள எப்ஸ்டீன் தான் என்பதை ரசிகர்கள் டீகோட் செய்து ஷாக் ஆகியுள்ளனர்.

நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் அடுத்ததாக சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகனை வைத்து இயக்கிய டாக்டர் திரைப்படம் 2021ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

Nelson Dhilipkumar and Sivakarthikeyan s Doctor movie based on Epstein Files

டாக்டர் படத்தின் கதையே, கோவா தீவில் வில்லன் வினய் சிறு வயது பெண் குழந்தைகளை கடத்தி வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வது தான். உலகையே சமீப காலமாக உலுக்கி வரும் எப்ஸ்டீன் பற்றிய கோப்புகளிலும் பெண் குழந்தைகளை கடத்தி அவன் நடத்திய கொடுமைகள் அடங்கியிருப்பதை பார்த்த ரசிகர்கள் நெல்சன் இந்த கதையை வைத்து தான் டாக்டர் படத்தை உருவாக்கியுள்ளார் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

பண போதை

குடும்பம் கஷ்டத்தில் இருக்கும் போதே டாஸ்மாக்கில் காசு கொடுத்து சரக்கு வாங்கி குடித்து விட்டு மனைவியையும் பெண் குழந்தையையும் போட்டு அடிக்கும் ஏகப்பட்ட தகப்பன்கள் இன்னமும் தமிழ்நாட்டில் இருந்துக் கொண்டு தான் இருக்கின்றனர். கையில் கொஞ்சம் காசு இருந்தாலே போதைக்கு அடிமையாகும் மக்கள், கழுத்து வரை காசு வைத்துக் கொண்டு பண போதையில் மிதக்கும் பணக்காரர்கள், உலகமே நமது காலுக்கு அடியில் தான் என நினைக்கும் உலக தலைவர்கள் எல்லாம் எப்ஸ்டீன் ஃபைல்ஸில் சிக்கியிருப்பதாக வெளியாகும் தகவல்கள் திடுக்கிட வைக்கிறது.

Nelson Dhilipkumar and Sivakarthikeyan s Doctor movie based on Epstein Files

பிஞ்சு குழந்தைகள்

8 முதல் 12 வயது சிறுமிகளை கூட விடாமல் அவர்களை பல இடங்களில் இருந்து கடத்தி வந்து பாலியல் ரீதியாக துன்புறுத்துவது, பலி கொடுப்பது, மனித மாமிஷமாக மாற்றி உண்பது என ஈவு இரக்கமற்ற மனித மிருகங்களாக உள்ளார்களே என பலரும் பதை பதைத்து வருகின்றனர். எப்ஸ்டீனுடன் டிரம்ப் இருக்கும் வீடியோக்களை பார்த்த பலரும் அமெரிக்க அதிபராக அவர் இருக்க தகுதியே கிடையாது எனக் கூறி வருகின்றனர்.

டாக்டர் படத்திலேயே நெல்சன்

எப்ஸ்டீன் சிறையில் அடைக்கப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவன் இருக்கும் போதும் போட்ட ஆட்டங்கள் தற்போது அம்பலமாகி வருகின்றன. சிறுமிகளை கடத்தி கடலுக்கு கனெக்ட் ஆகும் வகையில் அண்டர்கிரவுண்டில் அவர்களை அடைத்து வைத்து இருந்தான் என வெளியே கசிந்துள்ள தகவல்களை பார்த்த கோலிவுட் ரசிகர்கள் நெல்சன் அப்போ உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து தான் டாக்டர் படத்தையே உருவாக்கியுள்ளாரா? என வியந்து வருகின்றனர். வினய்யை வில்லனாக தேர்வு செய்ததற்கும் முக்கிய காரணம் இருக்கு என்றும் அப்படியே அவரது முகம் கிட்டத்தட்ட எப்ஸ்டீன் போலவே இருக்கே நோட் பண்ணுங்க என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

தமிழ்நாட்டின் டாப் இயக்குநர்

ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் நடிக்கப் போகும் படத்தையும் நெல்சன் இயக்கவுள்ள நிலையில், இன்றைய தேதியில் தமிழ்நாட்டின் டாப் இயக்குநராக மாறியுள்ளார் நெல்சன் என்றும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். கூடிய சீக்கிரமே கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்தின் படத்தின் அறிவிப்பு டீசர் வெளியாகி தெறிக்கவிட காத்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X