AK63 படத்தை இயக்கப் போறது அந்த இயக்குநரா?.. அப்போ அடுத்த இண்டஸ்ட்ரி ஹிட் லோடிங்!

சென்னை: அஜித்குமார் விரைவில் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த மாத இறுதியில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அஜித்குமாரின் ஏகே 63 படத்தை இயக்கப்போகும் இயக்குநர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அ. வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு எனத் தொடர்ந்து மூன்று படங்களில் நடித்த அஜித்குமார் அடுத்ததாக விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஏகே 62 படத்தில் நடிப்பார் என லைகா கடந்த ஆண்டு அறிவித்தது.

Nelson Dhilipkumar has high chances to direct Aijth Kumars AK63?

விடாத விடாமுயற்சி: ஆனால், விக்னேஷ் சிவனின் கதை கடைசி நேரத்தில் பிடிக்காத நிலையில், நடிகர் அஜித்குமார் அதிரடியாக இயக்குநரை மாற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏ கே 62 படத்தை மகிழ் திருமேனி இயக்குவார் என்றும் படத்திற்கு விடாமுயற்சி என்றும் டைட்டில் வைக்கப்பட்டு கடந்த மே 1-ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாள் அன்று அறிவிப்பு வெளியானது.

அந்த அறிவிப்புக்கு பிறகு சுமார் நான்கு மாதங்கள் ஆன நிலையிலும், இன்னமும் விடாமுயற்சி படத்தை ஆரம்பிக்கவில்லை. அந்த படத்திற்காக நடிகர் அஜித் துபாயில் தங்கி இருப்பதாகவும் படத்தின் பல முக்கியமான காட்சிகள் துபாயில் படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கூடிய விரைவில், விடாமுயற்சி படத்தின் சூட்டிங் தொடங்கும் என சமீபத்தில் சந்திரமுகி 2 படத்தின் இசை விழாவில் கலந்து கொண்ட லைகா தயாரிப்பாளர் சுபாஷ்கரனும் உறுதி அளித்திருந்தார்.

Nelson Dhilipkumar has high chances to direct Aijth Kumars AK63?

நெல்சன் இயக்கத்தில் அஜித்: இந்நிலையில், அஜித்குமாரின் ஏகே 63வது படத்தை இயக்கப் போவது யாரு என்கிற கேள்விக்கு இந்த ஆண்டு நடிகர் ரஜினிகாந்துக்கு மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்த ஜெயிலர் படத்தின் இயக்குநர் நெல்சன் தான் இயக்கப் போகிறார் என்கிற தகவல்கள் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.

சிவகார்த்திகேயன், விஜய், ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை இயக்கிய நெல்சன் அடுத்ததாக நடிகர் அஜித்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுவரை இது தொடர்பாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நெல்சன் இயக்கத்தில் அஜித் நடித்தால் ஜெயிலர் திரைப்படத்தைப் போலவே மற்றுமொரு பிளாக்பஸ்டர் இண்டஸ்ட்ரி ஹிட் லோடிங் என ரசிகர்கள் எதிர்பார்த்து இந்த கூட்டணி அமைய வேண்டும் என விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X