பிளாக்பஸ்டர் கொடுத்த லோகேஷே சம்பளத்தை உயர்த்தல.. நெல்சன் இஷ்டத்துக்கு ஏத்திட்டாரா?

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தலைவர் 169 படத்துக்கு சம்பளத்தை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார்.
சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை இயக்கிய 100 கோடி வசூல் வேட்டையை நடத்தி இருந்தார்.

பீஸ்ட் வசூல் எவ்வளவு

பீஸ்ட் வசூல் எவ்வளவு

டாக்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய தோல்வியை தழுவியது. ஆனால், வசூல் ரீதியாக வெற்றி என்பது போல, வெறும் பிளாக்பஸ்டர் ஹிட் போஸ்டர்களை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ வசூலை இதுவரை அறிவிக்கவில்லை. 200 கோடி வசூல் என விஜய் ரசிகர்களும், 200 கோடி வசூல் செய்யவில்லை என அஜித் ரசிகர்களும் கூறி வருகின்றனர்.

மீண்டும் வாய்ப்பு

மீண்டும் வாய்ப்பு

பீஸ்ட் படத்திற்கு வெளியான நெகட்டிவ் விமர்சனங்களை பார்த்த பின்னர் நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சனை மாற்றி விடுவார் என தகவல்கள் வெளியாகின. ஆனால், நெல்சனே பண்ணட்டும் என அவருக்கு மீண்டுமொரு வாய்ப்பை நடிகர் ரஜினிகாந்த் அளித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தலைவர் 169 படத்தை இயக்குநர் நெல்சன் தான் இயக்கப் போகிறார் என்பது உறுதியாகி விட்டது.

அந்த செக்

அந்த செக்

ஆனால், ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சனை முழுமையாக நம்பவில்லை என்றும் அதன் காரணமாகத் தான் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரை மேற்பார்வை செய்ய அழைத்திருக்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பீஸ்ட் படத்திலேயே தன்னை முழுமையாக செயல்பட வில்லை என நெல்சன் புலம்பித் தள்ளிய நிலையில், தலைவர் 169 படப்பிடிப்பின் போதும் இதுபோன்ற பிரச்சனைகள் வருமா? என்பதை

சம்பளம்

சம்பளம்

சம்பளத்தை ஏத்திட்டாராம்
சன் பிக்சர்ஸ் பீஸ்ட் படத்தை தொடர்ந்து மீண்டும் தலைவர் 169 படத்தை இயக்கும் வாய்ப்பையும் நெல்சனுக்கு வழங்கி உள்ள நிலையில், திடீரென தனது சம்பளத்தை அவர் உயர்த்தி உள்ளதாக ஷாக்கிங் தகவல்கள் தற்போது கோடம்பாக்கத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

30 கோடியா

30 கோடியா

விஜய், பூஜா ஹெக்டே நடித்த பீஸ்ட் படத்துக்கே 25 கோடி சம்பளம் வாங்கினார் நெல்சன் என்றும், தலைவர் 169 படத்துக்கு 30 கோடி ரூபாய் சம்பளத்தை உயர்த்தி உள்ளார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன. பல முன்னணி நடிகர்களே அந்த அளவுக்கு சம்பளம் இன்னும் வாங்காத நிலையில், நெல்சன் என்ன இப்படி உயர்த்திக் கொண்டே போகிறார் என பலரும் புலம்ப ஆரம்பித்து உள்ளதாக கூறுகின்றனர். ஆனால், இதுதொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

Beast Movie Team Interview | Nelson | Selvaraghavan |Pooja Hegde
லோகேஷ் சம்பளம்

லோகேஷ் சம்பளம்

விக்ரம் படத்தை இயக்கி கமலுக்கு இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜ் அந்த படத்திற்கு 10 கோடி ரூபாய் தான் சம்பளமாக வாங்கினார் என்றும் அடுத்து அவர் இயக்கப் போகும் தளபதி 67 படத்துக்கும் எந்தவொரு சம்பள உயர்வையும் அவர் அறிவிக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X