Jailer: சூப்பர்ஸ்டாரே கிடைச்சாலும்.. சுமாராத்தான் கதை எழுதுவேன்.. அட்லியாகவே மாறிய நெல்சன்!

சென்னை: ஜெயிலர் படத்தில் 100க்கு 100 மார்க் வாங்கினாரா இயக்குநர் நெல்சன் என்றால் ஜஸ்ட் பாஸ் என்று தான் சொல்ல வேண்டும். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், அனிருத் இசை என ஏகப்பட்ட மிரட்டலான விஷயங்கள் கைக்கு கிடைத்தாலும், அதை வைத்து மிகப்பெரிய சிக்ஸர் அடிக்காமல், 2 ரன் ஓடியிருக்கிறார் இயக்குநர் நெல்சன் என்று தான் சொல்ல வேண்டும்.

கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களில் வொர்க்கவுட் ஆன அளவுக்கு தியேட்டரே விழுந்து விழுந்து சிரிக்கும் அளவுக்கு டார்க் காமெடி பீஸ்ட் படத்தை போலவே ஜெயிலர் படத்திலும் ரொம்பவே மிஸ் ஆகி விட்டது.

Nelson Dhilipkumar turned Atlee in Rajinikanths Jailer

வில்லன் ஆட்கள் தான் செம டார்க் காமெடி செய்கின்றனர். தெலுங்கு நடிகர் சுனில், மாகாளி சுனில், தமன்னா, ரெட்டின் கிங்ஸ்லி போர்ஷன் எல்லாம் காமெடியாக சிரிக்க வைக்காமல் கடுப்பை கிளப்பி சோதிக்கிறது.

பீஸ்ட்டை விட சூப்பர்: இயக்குநர் நெல்சன் பண்ண ஒரே உருப்படியான விஷயம் என்னவென்றால் பீஸ்ட் படத்தில் வெறும் விஜய்யை வைத்து மட்டுமே பில்டப் பண்ணியதும் மொக்கையான வில்லன் கதாபாத்திரத்தை போட்டதும் தான். ஆனால், இங்கே ரஜினியை பெரிய ஜெயிலராக காட்டினாலும், அவருக்கு கேங்ஸ்டர்களான சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டவர்கள் உதவி செய்வது போன்ற காட்சிகள் நெல்சனை இந்த படத்தில் ரொம்பவே சூப்பராக காப்பாற்றியுள்ளது.

வில்லன் விநாயகன்: திமிரு, மரியான் உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் வில்லனாக நடித்த விநாயகன் இந்த ஜெயிலர் படத்தில் ஆரம்பத்தில் இருந்தே கொடூரமாக கொலைகளை செய்வது, சல்ப்யூரிக் ஆசிட்டில் தன்னை எதிர்ப்பவர்களை போட்டுக் கொள்வது என மிரட்டியிருக்கிறார்.

வசந்த் ரவியை கிளைமேக்ஸில் கண்களால் பயமுறுத்தும் காட்சியிலும், தன்னை கொல்ல வரும் ரஜினியை அப்படியே தனக்கான திருட்டு வேலையை செய்யும் அடியாளாக மாற்றும் இடங்களில் எல்லாம் ஸ்கோர் செய்திருக்கிறார்.

டாக்டர் அளவுக்கு இல்லை: ஜெயிலர் படம் ஆரம்பத்தில் இருந்தே ஸ்லோவாக செல்வது, பேரன் உடன் யூடியூப் சேனலுக்கு வீடியோ போடுவது, யோகி பாபு கார் விட்டு ஏற்ற வருவது, ரஜினிகாந்தை திட்டிப் பேசுவது, போன்ற ஆரம்ப காட்சிகளில் நெல்சன் பல இடங்களில் கோட்டை விட்டு விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

Nelson Dhilipkumar turned Atlee in Rajinikanths Jailer

டாக்டர் படத்தில் வரும் அளவுக்கு டார்க் காமெடி ஜெயிலர் படத்தில் இல்லை. இரண்டாம் பாதியில் சில இடங்களில் டார்க் காமெடி ரசிகர்களை லேசாக சிரிக்க வைக்கிறது. இன்னமும் நெல்சன் ஆக்‌ஷனுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை காமெடி காட்சிகளுக்கு அதுவும் ரம்யா கிருஷ்ணனை எல்லாம் பயன்படுத்தி கொடுத்திருந்தாலும், ஜெயிலர் மிரட்டியிருக்கும்.

அட்லீயாக மாறிய நெல்சன்: தர்பார், அண்ணாத்த படங்களுக்கு பிறகு ரஜினிகாந்துக்கு ஒரு ஹிட் படம் வேண்டும். பீஸ்ட் படத்துக்கு பிறகு நெல்சன் கம்பேக் கொடுக்க வேண்டும். இதனால், என்ன செய்வது என்று யோசித்த நெல்சன் கடைசியாக இயக்குநர் அட்லீயாகவே மாறிவிட்டார் என்றும் பாட்ஷா, விக்ரம், தங்கப்பதக்கம் என பல படங்களில் இருந்து பல சூப்பர்ஹிட் படங்களின் காட்சிகளையும் அழகாக அடுக்கி ஜெயிலர் படத்தை நீட்டாக கொடுத்து விட்டார் என்று தான் தெரிகிறது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு படம் பண்ணும் போது கூட ஏன் ஃபிரெஷ்ஷாக ஒரு கதையை நெல்சன் பிடிக்கவில்லை என்கிற கேள்வி படம் பார்க்கும் அனைவருக்கும் எழத்தான் செய்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X