தனுஷ் - ஐஸ்வர்யாவை சேர்த்து வைக்க நெல்சன் போட்டிருக்கும் பிளான்?.. ரஜினி ஹேப்பியாம்
சென்னை: கோலிவுட்டின் தற்போதைய தலைமுறை இயக்குநர்களில் நெல்சன் திலீப்குமார் முக்கியமானவர். இதுவரை நான்கு படங்களை இயக்கியிருக்கும் அவர் டார்க் காமெடி என்ற ஜானரை சிறப்பாக கையாண்டுவருகிறார். அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அடுத்ததாக அந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை அவர் எடுக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரும், விஜய் டிவியில் பணிபுர்ந்தவருமான நெல்சன் திலீப்குமார் சிம்பு, ஹன்சிகாவை வைத்து வேட்டை மன்னன் என்ற படத்தை தொடங்கினார். ஆனால் ஏதோ காரணங்களால் அந்தப் படம் பாதியிலேயே நின்றுவிட்டது. இதனையடுத்து மீண்டும் விஜய் டிவிக்கே சென்ற நெல்சன் அங்கு பல நிகழ்ச்சிகளை இயக்கிக்கொண்டிருந்தார்.

கோலமாவு கோகிலா: சில காலம் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த நெல்சன் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கினார். கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் மிகப்பெரும் ஹிட்டானது. யோகிபாபுவும் இந்தப் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் படம் கவனம் ஈர்த்ததால் நெல்சன் கவனிக்கப்படக்கூடிய இயக்குநராக மாறினார்.
டாக்டர்: இதனையடுத்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார். அனிருத் இசையமைத்திருந்த இந்தப் படத்தில் சிவாவுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடித்திருந்தார். அர்ச்சனா, வினய் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் மெகா ஹிட்டாகி 100 கோடி ரூபாயை வசூல் செய்தது. மேலும் படத்தில் இடம்பெற்றிருந்த டார்க் காமெடி காட்சிகளும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
ரோஸ்ட்டான பீஸ்ட்: முதல் இரண்டு படங்களும் ஹிட் கொடுத்ததால் விஜய்யை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு அமைந்தது. விஜய்யை வைத்து அவர் இயக்கிய பீஸ்ட் படம் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வந்த படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதனால் நெல்சன் திலீப் குமார் ட்ரோல் மெட்டீரியல் ஆனார். அதுமட்டுமின்றி, விஜய் என்ற ஸ்டாரை மட்டும்தான் நெல்சன் நம்பியிருக்கிறார். கதை என்ற ஒன்று இல்லவே இல்லை எனவும் பலர் வெளிப்படையாகவே விமர்சனத்தை முன்வைத்தனர்.
ஜெயிலர்: சூழல் இப்படி இருக்க ரஜினிகாந்த்தை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கினார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. முக்கியமாக நெல்சன் திலீப்குமாருக்கும், ரஜினிகாந்த்துக்கும் தரமான கம்பேக்காக அமைந்தது. உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய்வரை அந்தப் படம் வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. அதனையொட்டி நெல்சனுக்கு சன் பிக்சர்ஸ் சார்பில் கார் ஒன்றும் பரிசாக கொடுக்கப்பட்டது.
ஜெயிலர் 2: இந்தச் சூழலில் அவர் ஜெயிலர் 2 படத்தை இயக்கவிருக்கிறார். விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி ஏற்கனவே ஜெயிலரில் கெஸ்ட் ரோலில் நடித்த நடிகர்களை அதிக சீன்களில் பயன்படுத்த நெல்சன் திட்டமிட்டிருப்பதாகவும்; மேலும் தனுஷை கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்க யோசித்து அதை ரஜினியிடம் சொல்ல; அதற்கு ரஜினியும் டபுள் ஓகே சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி ஜெயிலர் 2 பூஜைக்கு ஐஸ்வர்யாவையும் எப்படியாவது வரவைத்துவிட வேண்டும் என்றும் ஒரு யோசனையில் இருப்பதாகவும் தெரிகிறது. இந்தத் தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் அட தனுஷ் - ஐஸ்வர்யாவை சேர்த்து வைக்க நெல்சனும் பக்கா பிளான் போட்டிருக்காரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். முன்னதாக அவர்கள் இருவரது விவாகரத்து வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போதும் இருவரும் ஆஜராகவில்லை. எனவே தனுஷ் - ஐஸ்வர்யா மீண்டும் இணையப்போவதாக சில தகவல்கள் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications