Nelson Dilipkumar - ஃபுல் பார்மில் நெல்சன் திலீப்குமார் - அடுத்து கமலுடன் கூட்டணி

சென்னை: Nelson Dilipkumar (நெல்சன் திலீப்குமார் ) இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அடுத்ததாக கமல் ஹாசனுடன் கூட்டணி அமைக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

தனியார் சேனலில் நடக்கும் ரியாலிட்டி ஷோக்களையும், விருது வழங்கும் விழாவையும் இயக்கிக்கொண்டிருந்தவர் நெல்சன் திலீப்குமார். சிம்புவை வைத்து பல வருடங்களுக்கு முன்பு வேட்டை மன்னன் படத்தை இயக்குவதற்கு கமிட்டானார். ஆனால் ஒரு சில காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது. அதன் பிறகு மீண்டும் சின்னத்திரைக்கு சென்ற நெல்சன் பல போராட்டங்களுக்கு பிறகு கோலமாவு கோகிலா மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

Nelson Dilip Kumar is going to direct the film with Kamal Haasan

கவனம் ஈர்த்த நெல்சன்: முதல் படத்தை பெரும்பாலும் ஹீரோயிச சப்ஜெக்ட்டாக எடுப்பவர்கள் மத்தியில் நெல்சனோ ஹீரோயினை மையமாக வைத்து உருவாக்கினார். நயன்தாரா உள்லிட்டோர் நடித்திருந்த கோலமாவு கோகிலா மெகா ஹிட்டானது. அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார். டார்க் காமெடி ஜானரில் உருவான டாக்டர் மெகா ஹிட்டாகி 100 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது.

பீஸ்ட்டால் ரோஸ்ட்டான நெல்சன்: முதல் இரண்டு படங்களும் மெகா ஹிட்டானதை அடுத்து விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான அந்தப் படம் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகி தோல்வியை சந்தித்தது. வெறும் தோல்வியோடு மட்டுமில்லாமல் கடுமையான விமர்சனத்தை சந்தித்து நெல்சனை ட்ரோல் மெட்டீரியலாகவும் மாற்றியது. அந்த ஒரு தோல்வியால் திறமைக்காரரான நெல்சன் திலீப்குமார் பெரும் மன உளைச்சலை சந்தித்ததாக கூறப்படுகிறது.

ஜெயிலரில் சம்பவம் இருக்கு: பீஸ்ட் படம் கொடுத்த அடி நெல்சன் திலீப்குமார் வாழ்க்கையில் மறக்க முடியாத வடுவாக மாறிவிட்டது. இப்படிப்பட்ட சூழலில் ரஜினிகாந்த்தை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கிவருகிறார் அவர். ரஜினிக்கும் இந்தப் படம் முக்கியமான படம் என்பதால் பார்த்து பார்த்து நிதானமாக படத்தை உருவாக்கியிருக்கிறார். அது சமீபத்தில் வெளியான க்ளிம்ப்ஸ் வீடியோவிலேயே தெரிந்தது. இதனால் ஜெயிலர் படம் கண்டிப்பாக நெல்சன் திலீப்குமாருக்கு கம்பேக்காக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸாகிறது.

Nelson Dilip Kumar is going to direct the film with Kamal Haasan

தனுஷுடன் கூட்டணி: இதுவரை எடுக்கப்பட்ட ஜெயிலர் படத்தின் காட்சிகளை பார்த்த ரஜினியும், சன்பிக்சர்ஸும் ரொம்பவே ஹேப்பியாம். இதனால் ஜெயிலருக்கு பிறகு தனது கிராஃப் நிச்சயம் உயரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம் நெல்சன் திலீப்குமார். அந்த உற்சாகத்தோடு சமீபத்தில் தனுஷை சந்தித்த நெல்சன் திலீப்குமார் ஒரு கதை சொன்னதாகவும், அந்தக் கதை பிடித்துப்போக அதில் தனுஷ் நடிக்க ஒத்துக்கொண்டார் என்றும் கூறப்படுகிறது.

கமலுடன் இணையும் நெல்சன்: இந்தச் சூழலில் கமல் ஹாசனை வைத்து படம் இயக்கும் திட்டத்திலும் நெல்சன் திலீப்குமார் இருக்கிறார் என புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதேசமயம் முதலில் தனுஷை வைத்து இயக்கும் படத்தை கமல் ஹாசன் தயாரித்துவிட்டு; நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கமல் நடிப்பார் எனவும் சொல்லப்படுகிறது. இந்தத் தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் நெல்சன் திலீப்குமார் ஃபுல் பார்மில் இருப்பதாக கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X