ஜெயிலர் 2லாம் இருக்கட்டும்.. நெல்சன் திலீப்குமார் என்ன செய்றார் பாருங்க.. மனுஷன் படு ஜாலி

சென்னை: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடைசியாக ஜெயிலர் திரைப்படம் வெளியானது. அதற்கு முன்னதாக அவரது இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படம் படுதோல்வியை சந்தித்து நெல்சனை ட்ரோலுக்குள்ளாக்கியது. அந்தப் பெயரை ஜெயிலரில் அவர் மாற்றிக்காட்டினார். படம் 700 கோடி ரூபாய்வரை உலகம் முழுவதும் வசூல் செய்தது. ஜெயிலர் படத்துக்கு பிறகு நெல்சன் யாரை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் ஜெயிலர் 2வை உருவாக்கவிருப்பதாக புதிய தகவல் ஒன்று சமீபமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

நெல்சன் திலீப்குமார் முதல்முதலாக சிம்புவை வைத்து வேட்டை மன்னன் படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் படம் ஆரம்பகட்டத்திலேயே நின்றுபோய்விட்டது. முதல் படம் ஹிட்டாகாமல் போனாலே அவர் ராசியில்லாத இயக்குநர் என முத்திரை குத்தும் கோலிவுட்டில் முதல் படம் கைவிடப்பட்டால் மேற்கொண்டு அந்த இயக்குநருக்கு பல முத்திரைகளை குத்தும் கோலிவுட். இருந்தாலும் அதையெல்லாம் காதில் ஏற்றிக்கொள்ளாத நெல்சன் மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இயக்குவதற்கு சென்றுவிட்டார்.

Nelson Dilipkumar in Foriegn photo is trending on social media

கோலமாவு கோகிலா: பல வருடங்களுக்கு பிறகு நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கினார் நெல்சன். அந்தப் படத்தில் அவருடன் யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார். டார்க் காமெடி ஜானரில் உருவான அந்தப் படம் மெகா ஹிட்டாகி நூறு கோடி ரூபாயை வசூலித்தது. இதனால் நெல்சன் திலீப்குமார் முக்கியமான இயக்குநர்கள் வரிசையில் நகர்ந்தார்.

பீஸ்ட்: மூன்றாவது படமாக அவர் விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் படுதோல்வி அடைந்தது. அந்தத் தோல்வியை வைத்து அவரை பலரும் கடுமையாக ட்ரோல் செய்தனர். ஒரு இயக்குநர் தோல்வி படம் கொடுப்பது சாதாரணமாதுதான் என்றாலும் பீஸ்ட் படத்தை வைத்து நெல்சன் ஏன் அவ்வளவு ட்ரோல் செய்யப்பட்டார். அது தேவையில்லாத ஒன்று சிலர் நெல்சனுக்கு ஆதரவாக நின்றனர். பீஸ்ட் படத்துக்கு பிறகு ரஜினியை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கினார்.

செம ரெஸ்பான்ஸ்: ஜெயிலர் படம் ரஜினிக்கும், நெல்சன் திலீப்குமாருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த படமாக பார்க்கப்பட்டது. ஏனெனில் ஜெயிலருக்கு முன்னதாக ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த, தர்பார் ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்தன. அதனால் அவரது சூப்பர் ஸ்டார் நாற்காலி ஆட்டம் கண்டுவிட்டதாக கூறினர். அதேபோல் பீஸ்ட் படத்தால் ஏற்பட்ட அவப்பெயரை இதில் துடைக்க வேண்டுமென்பதில் நெல்சன் திலீப்குமாரும் தீவிரமாக இருந்தார். இருவருக்கும் அந்தப் படம் கம்பேக்காக அமைந்து 700 கோடி ரூபாய்வரை உலகளவில் வசூல் செய்தது.

ஜெயிலர் 2: ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு நெல்சன் திலீப்குமாரின் டிமாண்ட் கோலிவுட்டில் ஏறியது. எனவே அவர் யாரை வைத்து அடுத்ததாக படம் இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. தனுஷுடன் இணையப்போகிறார் என்று பேச்சு எழுந்த சூழலில்; இல்லை அடுத்ததாக அவர் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப்போகிறார் என்று கடந்த சில நாட்களாக தகவல்கள் பரவின. ஆனாலும் அதில் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

ஜாலி பண்ணும் நெல்சன்: ஜெயிலர் 2 படம் உருவாகப்போகிறது என்று தகவல்கள் பரபரத்துக்கொண்டிருக்க; மறுபக்கம் நெல்சன் திலீப்குமார் தனது மனைவி மற்றும் நண்பர்களான சுனில், ரெடின் கிங்ஸ்லி ஆகியோருடன் வெளிநாட்டுக்கு டூர் சென்றிருக்கிறார். அங்கு அவர்கள் கடற்கரையில் ஜாலி செய்யும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன. அதனைப் பார்த்த ரசிகர்கள் மனுஷன் எந்த ப்ரெஷரும் இல்லாம ஜாலியாக இருக்கிறாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X