Nelson Dilipkumar - என்னது பீஸ்ட் படத்தில் இன்னும் சில காட்சிகளை எடுக்கலையா?.. என்ன சொல்றீங்க நெல்சன்?

சென்னை: Nelson Dilipkumar (நெல்சன் திலீப்குமார்) பீஸ்ட் படம் எதனால் தோல்வி அடைந்தது என்பது குறித்து நெல்சன் திலீப்குமார் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். முதல் படத்திலேயே ஹீரோயினை மையமாக வைத்து கதை எழுதி அதில் டார்க் காமெடியையும் கலந்து ஹிட் கொடுத்தார். இதன் காரணமாக முதல் படத்திலேயே கவனம் பெற்ற இயக்குநராக மாறிய அவர் இரண்டாவது படமாக சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார்.

Nelson Dilipkumar Open Talks about Beast Movie

மெகா ஹிட்: கோலமாவு கோகிலா படம் கொடுத்த அடையாளத்தைவிடவும் டாக்டர் படம் அதிகமாகவே நெல்சன் திலீப்குமாருக்கு அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. குறிப்பாக அதுவரை யாரும் பார்க்காத சிவகார்த்திகேயனை நெல்சன் காட்சிப்படுத்தியிருந்தார். அதுமட்டுமின்றி முதல் படத்தைவிடவும் இந்தப் படத்திலும் டார்க் காமெடி பயங்கரமாக ஒர்க் அவுட் ஆனது. படம் மெகா ஹிட்டாகி நூறு கோடி ரூபாயை வசூலித்தது.

பீஸ்ட்: முதல் இரண்டு படங்களின் மெகா ஹிட்டுக்கு பிறகு விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார். நெல்சன் முதன்முறையாக விஜய்யுடன் இனைந்ததால் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை. அதுமட்டுமின்றி பீஸ்ட் படத்துக்கு போட்டியாக கேஜிஎஃப் 2 களமிறங்கி தமிழ்நாட்டில் மெகா ஹிட்டடித்தால் பீஸ்ட்டின் தோல்வி கோலிவுட்டுக்கு கௌரவ குறைச்சலாகவே பார்க்கப்பட்டது.

வறுக்கப்பட்ட நெல்சன்: பீஸ்ட் தோல்வியால் பலரும் நெல்சனை விமர்சிக்க தொடங்கினார்கள். ஒருகட்டத்துக்கு மேல் அந்த விமர்சனம் கிண்டலாக மாறியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். ஒரு படம் தோல்வி கொடுத்ததால் நெல்சனை குறைத்து மதிப்பிட வேண்டாம் எனவும் கூற செய்தனர். தற்போது ஜெயிலர் படத்தை எடுத்து அதை நல்ல படமாகவும் கொடுத்துவிட்டார். இதன் காரணமாக அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.

Nelson Dilipkumar Open Talks about Beast Movie

நெல்சன் பேட்டி: இந்நிலையில் பீஸ்ட் படத்தின் தோல்விக்கு என்ன காரணம் என்பது குறித்து நெல்சன் திலீப்குமார் ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "பீஸ்ட் படத்துக்கு கூடுதலாக 6 முதல் 7 மாதங்கள்வரை செலவழித்திருந்தால் ரிசல்ட் வேறு மாதிரி இருந்திருக்கும். குறிப்பிட்ட நேரத்துக்குள் படத்தை முடிக்க நினைத்தேன். ஆனால் அதுதான் தவறான முடிவாக அமைந்துவிட்டது.

கொரோனா பாதிப்பு: அதேபோல் கொரோனா பாதிப்பு படத்தை வெகுவாக பாதித்துவிட்டது. திட்டமிட்டபடி எங்களால் செயல்பட முடியவில்லை. விஎஃப்எக்ஸ் பணிகளையும் நினைத்தபடி முழுமையாக செய்ய முடியவில்லை. முக்கியமாக பீஸ்ட் படத்துக்கான காட்சிகள் இன்னும் சில எடுக்கப்படாமல் அப்படியேத்தான் இருக்கின்றன" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X