கீழே விழுந்தா சிரிக்கத்தான் செய்வாங்க.. தூக்கிவிட மாட்டாங்க.. மனம் திறந்த நெல்சன் திலீப்குமார்
சென்னை: Nelson Dilipkumar (நெல்சன் திலீப்குமார்) கீழே விழுந்தா சிரிக்கத்தான் செய்வாங்க தூக்கிவிட மாட்டாங்க என ஜெயிலர் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தெரிவித்திருக்கிறார்.
நெல்சன் திலீப்குமார் இதுவரை நான்கு படங்களை இயக்கியிருக்கிறார். இவற்றில் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா அவரது முதல் படமாகும். முதல் படத்திலேயே ஹீரோயினை மையப்படுத்திய சப்ஜெக்ட்டை எடுத்து கோலிவுட்டில் கவனம் பெற்றார். அதேபோல் டார்க் காமெடி என்ற ஜானரையும் அவர் சரியாக பயன்படுத்தி பலரையும் சிரிக்க வைத்தார்.

டாக்டர்: கோலமாவு கோகிலா படத்துக்கு அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார் நெல்சன். படம் முழுக்க சிவகார்த்திகேயனை சிரிக்க வைக்காமல் ரசிகர்களை சிரிக்க வைத்தார். படம் 100 கோடி ரூபாய் வசூல் அடித்தது. சிவகார்த்திகேயன் படங்களிலேயே முதன்முறையாக டாக்டர் படம்தான் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது என்பது குறிப்பிடத்தக்கது
பீஸ்ட்: அதனைத் தொடர்ந்து விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார். படத்தைப் பார்த்த ரசிகர்களோ தங்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றும் நெல்சன் திலீப்குமார் தங்களை ஏமாற்றி விட்டார் என்றும் விமர்சிக்க ஆரம்பித்து அதற்கு அடுத்ததாக அவரை கடுமையாக ட்ரோல் செய்யவும் ஆரம்பித்தனர். அதுமட்டுமின்றி சில நிகழ்ச்சிகளில் அவர் அவமானப்படுத்தப்பட்டார் என்றும் பலர் கொந்தளித்தனர்.
ஜெயிலர்: பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோதே ஜெயிலர் படத்தில் கமிட்டானார் நெல்சன். படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் மூலம் ரஜினிக்கும் கம்பேக் கொடுத்து இவரும் கம்பக் கொடுத்திருக்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதுவரை உலக அளவில் 500 கோடி ரூபாய் வசூலை தாண்டிவிட்டதாக சன் பிக்சர்ஸ் நிறுவனமும் அறிவித்துவிட்டது.
நெல்சன் பேட்டி: இந்நிலையில் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த நெல்சன் திலீப்குமார். அந்தப் பேட்டியில் அவரிடம், 'எப்படி உங்களால் கஷ்டமான காலத்திலும் சிரிக்க முடிகிறது' என கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "சின்ன வயதிலிருந்தே இப்படித்தான். நான் லோயர் மிடில் க்ளாஸ் பின்னணியிலிருந்து வந்தவன். அப்படிப்பட்டவர்கள் எந்த கஷ்டம் இருந்தாலும் சிரித்துக்கொண்டேதான் இருப்பார்கள். எனது அப்பாவுக்கு ஒருமுறை ஸ்ட்ரோக் வந்துவிட்டது. அதை எனது நண்பனிடம் சொன்னேன். அதற்கு அவனோ 2 ஸ்ட்ரோக்கா இல்லை 4 ஸ்ட்ரோக்கா என்றார்.
இப்படித்தான் இருப்போம். காசு இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஜாலியாகத்தான் இருப்போம். கீழே விழுந்தாக்கூட இங்கே சிரிக்கத்தான் செய்வார்கள். யாரும் தூக்கிவிட மாட்டார்கள். ஹே பார்த்தியா இவ்ளோ அடிப்பட்டிருக்கா என சொல்லிவிட்டு செல்வார்கள்" என்றார். அவரது இந்தப் பேட்டி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
குறைத்து மதிப்பிடாதீர்கள்: இதற்கிடையே பீஸ்ட் படத்துக்காக நெல்சன் திலீப்குமார் கலாய்க்கப்பட்டபோது ஒரு தரப்பினர் அவருக்கு ஆதரவாக நின்றனர். அதாவது நெல்சன் திலீப்குமாரை குறைத்து மதிப்பிடாதீர்கள். டார்க் காமெடி செய்வது ரொம்பவே கஷ்டம். ஒரு படத்தில் சறுக்கிவிட்டால் அந்த இயக்குநர் அத்தோடு காலி ஆகப்போவதில்லை என்று கூறினர்.
மேலும் ஒரு விருது வழங்கும் விழாவில் அவர் பவுன்சர்களால் அவமதிக்கப்பட்டார் என்ற சர்ச்சை எழுந்தது. அதேசமயம் அந்த விழாவில் ரொம்பவே ஜாலியாக பேசிவிட்டு சென்றார் நெல்சன் திலீப்குமார். அதனைப் பார்த்த அவரது ஆதரவாளர்கள் இவ்வளவு சோகத்திலும் எவ்வளவு ஜாலியாக இருக்கிறார் பாருங்கள் என்று கமெண்ட்ஸ் செய்துவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











