Nelson Dilipkumar - சினிமா எடுக்கவே பிடிக்கல.. அவர்தான் வற்புறுத்தினார் - நெல்சன் ஓபன் டாக்

சென்னை: Nelson Dilipkumar தனது திரை வாழ்க்கை குறித்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் தற்போது ட்ரெண்டாகியுள்ளது.

கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான நெல்சன் திலீப்குமார் முதல் படத்திலேயே ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றார். முதல் படமே ஹீரோயினை மையமாக வைத்து இயக்கிய மிகச்சில இயக்குநர்களில் நெல்சனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பமே நெல்சனுக்கு போராட்டம்தான்

ஆரம்பமே நெல்சனுக்கு போராட்டம்தான்

நெல்சன் திலீப்குமார் முதல்முதலாக சிம்புவை வைத்து வேட்டை மன்னன் படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் படம் ஆரம்பகட்டத்திலேயே நின்றுபோய்விட்டது. முதல் படம் ஹிட்டாகமால் போனாலே அவர் ராசியில்லாத இயக்குநர் என முத்திரை குத்தும் கோலிவுட்டில் முதல் படம் கைவிடப்பட்டால் மேற்கொண்டு அந்த இயக்குநருக்கு பல முத்திரைகளை குத்தும் கோலிவுட். இருந்தாலும் அதையெல்லாம் காதில் ஏற்றிக்கொள்ளாத நெல்சன் மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இயக்குவதற்கு சென்றுவிட்டார்.

மெகா ஹிட்டான கோலமாவு கோகிலா, டாக்டர்

மெகா ஹிட்டான கோலமாவு கோகிலா, டாக்டர்

பல வருடங்களுக்கு பிறகு நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கினார் நெல்சன். அந்தப் படத்தில் அவருடன் யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார். டார்க் காமெடி ஜானரில் உருவான அந்தப் படம் மெகா ஹிட்டாகி நூறு கோடி ரூபாயை வசூலித்தது. இதனால் நெல்சன் திலீப்குமார் முக்கியமான இயக்குநர்கள் வரிசையில் நகர்ந்தார்.

பீஸ்ட் கொடுத்த அடி; ஜெயிலர் காப்பாற்றுமா?

பீஸ்ட் கொடுத்த அடி; ஜெயிலர் காப்பாற்றுமா?

மூன்றாவது படமாக அவர் விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் படுதோல்வி அடைந்தது. அந்தத் தோல்வியை வைத்து அவரை பலரும் கடுமையாக ட்ரோல் செய்தனர். ஒரு இயக்குநர் தோல்வி படம் கொடுப்பது சாதாரணமாதுதான் என்றாலும் பீஸ்ட் படத்தை வைத்து நெல்சன் ஏன் அவ்வளவு ட்ரோல் செய்யப்பட்டார். அது தேவையில்லாத ஒன்று சிலர் நெல்சனுக்கு ஆதரவாக நின்றனர். பீஸ்ட் படத்துக்கு பிறகு ரஜினியை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கிவருகிறார் நெல்சன்.இந்தப் படம் அவருக்கு கம்பேக்காக அமையும் என நம்பப்படுகிறது.

அவமதிக்கப்பட்ட நெல்சன் திலீப்குமார்?

அவமதிக்கப்பட்ட நெல்சன் திலீப்குமார்?

சூழல் இப்படி இருக்க சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்று நடைபெற்றது. அதில் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார் ஆகிய இருவரும் கலந்துகொண்டனர். இரண்டு பேருமே வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர்கள்தான் என்றாலும், அங்கிருந்த பௌன்சர்கள் லோகேஷ் கனகராஜுக்கு கொடுத்த வரவேற்புக்கும், நெல்சனுக்கு கொடுத்த வரவேற்புக்கும் பாரபட்சம் இருந்தது என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்தனர். மேலும், ஒரு படம் தோல்வி கொடுத்தால் இப்படியா அவமானப்படுத்துவது என நெல்சனுக்கு ஆதரவும் தெரிவித்தனர்.

நெல்சனின் ட்ரெண்டாகும் வீடியோ

நெல்சனின் ட்ரெண்டாகும் வீடியோ

இந்நிலையில் நெல்சன் திலீப்குமார் தனியார் ஊடகத்துக்கு ஒன்று அளித்த பேட்டி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் பேசிய அவர், "நமக்கு பின்னாடி இருந்தவங்க முன்னாடி போயிருப்பாங்க. நமக்கு முன்னாடி இருந்தவங்க பின்னாடி போயிருப்பாங்க. இதுதானே எல்லோருக்கும் நடக்கும். என் ஐடியா ஒர்க் ஆகும்வரை நான் இருப்பேன். நான் அவுட் டேட் ஆகிவிட்டால் வேறு யாராவது வருவார்கள். சினிமா என்பது மியூசிக்கல் சேர் போல்தான். இதை சாதாரணமாக எடுத்துக்கொண்டால் நாளை ஏதேனும் சிக்கல் நடக்கும்போது அப்போதும் சாதாரண மைண்ட் செட்டிலேயே இருந்துவிடலாம்.

சினிமாவில் எனக்கு விருப்பமே இல்லை

சினிமாவில் எனக்கு விருப்பமே இல்லை

எனது அப்பா ஒரு எழுத்தாளர். நிறைய மேடை நாடகங்களுக்கெல்லாம் கதை எழுதுவார். வீட்டில் அவர் எழுதியவை பண்டல் பண்டலாக இருக்கும். சின்ன வயதில் என்னிடம் அவர், 'எங்க நீயும் ஒரு கதை சொல்லு பார்ப்போம்' என சொல்லிக்கொண்டே இருப்பார். அவர் எடுத்த டெலி ஃபிலிமில் நான் உதவி இயக்குநராகவும் இருந்திருக்கிறேன். எனக்கு சினிமாவில் ஆர்வமே இல்லை . எனக்கு மருத்துவரோ இல்லை பொறியாளரோ ஆக வேண்டுமென்பதுதான் ஆசை.

அப்பாதான் என்னை வற்புறுத்தினார்

அப்பாதான் என்னை வற்புறுத்தினார்

ஆனால் +2வில் நான் 80 சதவீத மதிப்பெண்கள்தான் எடுத்தேன். உடனே அப்பா என்னை விஷுவல் கம்யூனிகேஷனில் சேர்க்க ஆசைப்பட்டார். ஆனால் நன் முடியாது என்று சொல்லிவிட்டேன். நல்ல கல்லூரியில் பொறியாளருக்கான வாய்ப்பு கிடைத்தால் படி இல்லை என்றால் விஷுவல் கம்யூனிகேஷன் படி. அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால் மெக்கானிக் ஷெட்டுக்கு வேலைக்கு போ என்றார்.

அவர் நினைத்தபடியே எனக்கு பொறியாளர் சீட் மெரிட்டில் கிடைக்கவில்லை. அதனையடுத்து விஷுவல் கம்யூனிகேஷனில் சேர்ந்தேன். முதலில் அது என்னவென்றே எனக்கு தெரியவில்லை. இரண்டாம் ஆண்டில் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போன பிறகுதான் எப்படியாவது சம்பாதிக்க வேண்டுமே என தோன்றி ஒழுங்காக படிக்க ஆரம்பித்து இதற்குள் வந்தேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X