Jailer Audio Launch: குடிப்பழக்கம் மட்டும் என்னிடம் இல்லாமல் இருந்திருந்தால்.. ரஜினி பேச்சு!
சென்னை: குடிப்பழக்கம் மட்டும் என்னிடம் இல்லாமல் இருந்திருந்தால் இப்போது இருப்பதை விட எங்கோ உயரத்தில் இருந்திருப்பேன் என்று ஜெயிலர் இசைவெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் அதிரடியாக பேசி உள்ளார்.
ஜெயிலர் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த விழாவில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், இயக்குநர் நெல்சன், தயாரிப்பாளர் கலாநிதி மாறன், அனிருத், ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், விக்னேஷ் சிவன் என பலர் கலந்து கொண்டனர்.

ரஜினிகாந்த் பேச்சு: இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த் அண்ணாத்த படத்திற்கு பின், கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நாம் சந்திக்கிறோம். அண்ணாத்த திரைப்படம் முடிந்ததற்கு பிறகு இவ்வளவு நாள் கேப் ஆனதற்கு காரணம் சரியான கதையும், இயக்குநரும் எனக்கு கிடைக்கவில்லை. சினிமாவிற்கு வந்து தயாரிப்பாளர் அப்பா என்றால், இயக்குநர் அம்மா போன்றவர்கள்.
நிறை கதைகளை நிராகரித்தேன்: இயக்குநர் கையில் தான் ஒரு படத்தின் கதையே உள்ளது ஒரு இயக்குநரால்தான் படத்தில் நடிப்பவர்களுக்கும் வேலை செய்பவர்களுக்கும் நல்ல பெயர் கிடைக்கும். அண்ணாத்த படத்திற்கு நான் நிறைய கதைகளை கேட்டேன் அவை அனைத்தும் பாட்ஷா, அண்ணாமலை படம் போலவே இருந்தது. இதனால் நான் நிறைய கதைகளை நிராகரித்தேன் அதுவே எனக்கு கஷ்டமாக இருந்தது.
லேட்டா வந்த நெல்சன்: நெல்சனை கதை சொல்ல 10 மணிக்கு வரச் சொன்னேன். அவர் 11:30 மணிக்கு வரவா என்றார். ஆனால் நெல்சன் 12 மணிக்குத்தான் வந்தார். வந்தவர் உடனே நல்லதாக ஒரு காபி கொடுங்கனு கேட்டார். குடிச்சிட்டு கதையோட ஒன்லைன் சொன்னார். அவர் கதை சொல்ல சொல்ல எனக்கு கதை ரொம்ப பிடித்துவிட்டது. பீஸ்ட் இன்னும்10 நாட் ஷூட்டிங் இருக்கு முடிச்சிட்டு வந்து கதை முழுகதையும் சொல்கிறேன் என்று சொன்னார். எனக்கு கதை ரொம்பவே பிடித்துவிட்டதால், ப்ரோமோ ஷூட் பண்ணி படத்தை அறிவித்தோம் என்றார்.
குடிப்பழக்கம்: தொடர்ந்து பேசிய ரஜினி, குடிப்பழக்கம் மட்டும் என்னிடம் இல்லாமல் இருந்திருந்தால் இப்போது இருப்பதை விட எங்கோ உயரத்தில் இருந்திருப்பேன். குடிப்பழக்கம் எனக்கு நானே வைத்துக் கொண்ட சூனியம். தயவு செய்து குடிப்பழக்கத்தை விட்டுவிடுங்கள். அதுக்காக குடிக்கவே வேண்டாம் என்று சொல்லவில்லை, எப்போதாவது குடிகள். நீங்க குடிக்கிறதால அம்மா, பொண்டாட்டினு குடும்பத்துல இருக்குற எல்லோருமே கஷ்டப்படுவாங்க என்று ஜெயிலர் இசைவெளியீட்டு விழாவில் பேசிஇருந்தார்.


Click it and Unblock the Notifications











