தளபதி பிறந்தநாள்... ரசிகர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் விருந்து... சன் பிக்சர்ஸ் அறிவிப்பு

சென்னை :தளபதி விஜய்யின் 47வது பிறந்தநாள் வரும் 22ம் தேதி சிறப்பான வகையில் கொண்டாடப்பட உள்ளது.

இதையொட்டி அவர் தற்போது நடித்துவரும் தளபதி 65 படக்குழு ரசிகர்களுக்கு எந்தமாதிரியான ட்ரீட்டை கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்களிடம் எழுந்தது.

இந்நிலையில் படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் சூப்பர் அப்டேட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பிறந்தநாள் கொண்டாட்டம்

பிறந்தநாள் கொண்டாட்டம்

நடிகர் தளபதி விஜய் தற்போது விஜய் 65 படத்தில் நடித்து வருகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு ஜியார்ஜியாவில் நடந்து முடிந்துள்ளது. கொரோனா காரணமாக இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் வரும் ஜூலை துவக்கத்தில் இதன் படப்பிடிப்பு மீண்டும் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இதனிடையே விஜய் தனது 47வது பிறந்ததினத்தை வரும் 22ம் தேதி கொண்டாடவுள்ளார். இதையொட்டி தளபதி 65 படத்தின் பர்ஸ்ட் லுக் அல்லது படத்தின் தலைப்பை படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது. இதையொட்டி ட்விட்டர் தளத்தில் ரசிகர்கள் தாங்களாகவே டிசைன் செய்த போஸ்டர்களையும் வெளியிட்டு மகிழ்ந்து வந்தனர்.

ஜூன் 21 மாலை வெளியீடு

ஜூன் 21 மாலை வெளியீடு

இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் விஜய் பிறந்தநாளையொட்டி முந்தைய நாள் அதாவது 21ம் தேதி மாலை 6 மணியளவில் வெளியாக உள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ மூலம் அறிவித்துள்ளது. விஜய் வாய்சில் வெளியாகியுள்ள இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

உறுதிப்படுத்திய இயக்குநர்

உறுதிப்படுத்திய இயக்குநர்

இந்நிலையில் படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரும் இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். தளபதி பிறந்தநாளை அவரது ரசிகர்கள் தளபதி 65 படக்குழுவினருடன் இணைந்து கொண்டாட நினைத்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு அவர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X