Nelson Dilipkumar - என்னது ஜெயிலர் படம் விக்ரம் பட காப்பியா?.. நெல்சன் திலீப்குமார் கொடுத்த சூப்பர் விளக்கம்
சென்னை: Nelson Dilipkumar (நெல்சன் திலீப்குமார்) விக்ரம் படத்தின் காப்பிதான் ஜெயிலர் படம் என்று கூறப்பட்ட சூழலில் அதுகுறித்து நெல்சன் திலீப்குமார் விளக்கமளித்திருக்கிறார்.
இரண்டு வருடங்களுக்கு பிறகு ரஜினி நடித்த படம் ஜெயிலர் கடந்த மாதம் 10ஆம் தேதி வெளியானது. இதனால் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் திரையரங்குகளுக்கு சென்றனர். அவர்களின் ஆவலை படமானது பூர்த்தி செய்திருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் ரஜினியே நிறைந்திருக்கிறார் என்றும்; ரொம்ப நாள் கழித்து இப்படி ரஜினியை பார்ப்பதற்கு சந்தோஷமாக இருந்ததாகவும் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.

நெல்சனுக்கு பாராட்டு: ரஜினிக்கு எவ்வளவு பாராட்டு தெரிவித்தார்களோ அதே அளவு நெல்சன் திலீப்குமாருக்கும் தங்களது பாராட்டை தெரிவித்துவருகின்றனர். மேக்கிங் எல்லாம் அபாரமாக இருக்கிறது என்றும்; ரஜினிக்கும் கம்பேக் கொடுத்து தானும் கம்பேக் செய்துவிட்டார் என்றும் கூறுகின்றனர். இதனால் நெல்சனும் பீஸ்ட்டில் விட்டதை ஜெயிலரில் பிடித்துவிட்டோம் என உற்சாகத்தில் இருக்கிறார்.
வசூல்: ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூலே படக்குழுவுக்கு திருப்தியைத்தான் தந்தது. அடுத்தடுத்து நாட்களில் படம் செய்த நல்லபடியாகவே வசூல் செய்துவந்தது. வெளியாகி ஒரு வாரத்தில் 375 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துவிட்டதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும் இதுவரை600 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருப்பதாக சன் பிக்சர்ஸ் அறிவித்திருக்கிறது.
பரிசுகள்: இதனையடுத்து ரஜினிகாந்த்துக்கு பிஎம்டபிள்யூ, அனிருத் மற்றும் நெல்சன் திலீப்குமாருக்கு போர்ஷே கார்களை பரிசாக வழங்கினார் கலாநிதி மாறன். கார்களை தவிர்த்து அவர்களுக்கு செக் ஒன்றையும் பரிசாக கொடுத்தார். அதுதொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகி ட்ரெண்டாகின. குறிப்பாக அவர்களிடம் சில கார்களை நிறுத்தி எது வேண்டுமோ அதை எடுத்துக்கொள்ள சொன்னது பலரது கவனத்தையும் ஈர்த்தது.
விக்ரம் காப்பி?: இதற்கிடையே ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ப்ளே லிஸ்ட் காட்சிகள், தந்தை - மகன் உறவு, மாமனார் - மருமகள் உறவு உள்ளிட்டவை அப்படியே விக்ரம் படத்தை பார்த்து எடுக்கப்பட்டிருப்பதாக படம் வெளியானபோதே விமர்சனங்கள் வந்தன. ஆனால் நெல்சன் திலீப்குமார் அமைதி காத்தார். இந்தச் சூழலில் அதற்கு அவர் தற்போது விளக்கமளித்திருக்கிறார்.
நெல்சனின் விளக்கம்: அவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் இதுகுறித்து பேசுகையில், "லோகேஷ் கனகராஜிடம் கடந்த ஆண்டே ஜெயிலர் படத்தின் கதையை சொல்லிவிட்டேன். விக்ரமிலும் இதேபோன்ற விஷயங்கள் இருப்பதாக கூறினார். இரண்டு படத்தின் ஆரம்பமும் ஒரே மாதிரி இருந்தாலும் கதை டேக் ஆஃப் ஆன பிறகு வேறு மாதிரி இருக்கும் என்றேன் நான். விக்ரம் காட்சிகள் போல் ஜெயிலரிலும் வர வேண்டும் என வேண்டுமென்று செய்யவில்லை. விக்ரம் ரிலீஸுக்கு முன்னதாகவே இந்த கதையை சொன்னேன்.
அதேசமயம் இரண்டு படங்களும் ஒரே மாதிரி முடிந்தாலும் எதையுமே மாற்ற நான் விரும்பவில்லை. அப்படி மாற்றினால் நான் எழுதிய ஸ்க்ரிப்ட்டில் பிரச்னையாகிவிடும். இரண்டு படங்களும் நன்றாக இருந்தால் இரண்டையுமே மக்கள் ரசிப்பார்கள் என்று நம்பினேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











