Rajini - ஜெயிலர் ரஜினிக்கு செட் ஆகாது என பலர் கூறினார்கள்.. நெல்சன் திலீப்குமார் கொடுத்த ஷாக்
சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) ஜெயிலர் படம் ரஜினிக்கு செட் ஆகாது என பலர் கூறியதாக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தெரிவித்திருக்கிறார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மெகா ப்ளாக் பஸ்டர் ஆகியிருக்கிறது.

கடந்த சில வருடங்களாக தடுமாறிக்கொண்டிருந்த ரஜினிக்கு நெல்சன் திலீப்குமாரும், பீஸ்ட்டில் விழுந்த நெல்சன் திலீப்குமாரை ரஜினிகாந்த்தும் ஒருவருக்கொருவர் கைகொடுத்து தூக்கியிருக்கிறார்கள் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியோடு கூறிவருகிறார்கள்.
வசூலில் மெகா மாஸ்: படம் ரிலீஸாகி ஒரு வாரத்தின் முடிவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வசூல் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி ஒரு வார முடிவில் 375 கோடி ரூபாயை தாண்டிவிட்டதாக சன் பிக்சர்ஸ் தெரிவித்தது. மொத்தம் 650 கோடி ரூபாயை தாண்டி வசூல் செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கலாநிதி மாறன் பரிசு: இந்தச் சூழலில் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகிவிட்டதால் கலாநிதி மாறன் பரிசுகளை அள்ளி கொடுத்தார். அதன்படி ரஜினி வீட்டுக்கு சென்ற அவர் செக்கை கொடுத்து இரண்டு பிஎம்டபிள்யூ கார்களை காட்டி எது வேண்டுமோ எடுத்துக்கொள்ளும்படி பணித்தார். அதேபோல் நெல்சனிடமும், அனிருத்திடமும் சில கார்களை கலாநிதி காட்ட அவர்கள் போர்ஷே கார்களை பரிசாக பெற்றுக்கொண்டனர். ரஜினிக்கு கொடுத்தது போல் அவர்களுக்கும் செக் ஒன்றை பரிசாக கொடுத்தார்.
ரஜினி ஹேப்பி: ஜெயிலர் படத்தின் மூலம் தரமான கம்பேக் கிடைத்திருப்பதால் ரஜினியும் செம ஹேப்பியில் இருக்கிறார். தற்போது அவர் ஞானவேல் இயக்கத்தில் தனது 170ஆவது படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 171ஆவது படத்தில் நடிக்கிறார். இந்த இரண்டு படங்களும் ஜெயிலர் போல் ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் இருக்கிறது.
நெல்சன் பேட்டி: இந்நிலையில் நெல்சன் திலீப்குமார் அளித்த பேட்டி ஒன்றில், “ஜெயிலர் படத்தில் முதலில் ரஜினியை நடிக்க வைப்பதற்கே நான் விரும்பவில்லை. ஏனெனில் அவர் இந்த ஜானரில் நிறைய படங்களில் நடித்துவிட்டார். எனவே அது ரஜினிக்கு செட் ஆகாது என்று பலரும் என்னிடம் கூறினார்கள். எனக்கேக்கூட ஷூட்டிங் ஆரம்பித்து 10 நாட்களுக்கு பிறகே நம்பிக்கை வந்தது” என்றார்.


Click it and Unblock the Notifications











