தன்னுடைய பாணியிலிருந்து விலகுகிறாரா நெல்சன்.. காமெடி களத்திலிருந்து வன்முறைக்கு மாறியது ஏன்?

சென்னை : நடிகர் ரஜினிகாந்த்தின் அண்ணாத்தப் படத்தின் கலவையான விமர்சனங்கள் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

Recommended Video

Thalaivar 169 Title வேற லெவல், ரசிகர்கள் கொண்டாட்டம் *Kollywood | Filmibeat Tamil

ஆயினும் அந்தப் படம் வசூல்வேட்டை நடத்தியது. இந்நிலையில் தற்போது நெல்சனுடன் இணைந்துள்ளார் சூப்பர்ஸ்டார்.

இந்தப் படத்தின் டைட்டிலை தற்போது சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. ஜெயிலர் என்று படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினியின் அண்ணாத்த படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் சிவா இயக்கத்தில் கடந்த பொங்கலையொட்டி வெளியானது. ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாட்டத்துடன் எதிர்கொண்டனர். ஆனால் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. அண்ணன் -தங்கை சென்டிமெண்டை மையமாக வைத்து படம் வெளியானது. ஆனாலும் ரசிகர்களை கவர படம் தவறியது. ஆனாலும் சிறப்பான வசூலை படம் பெற்றுள்ளது.

நெல்சன் இயக்கும் ரஜினி படம்

நெல்சன் இயக்கும் ரஜினி படம்

இதையடுத்து ரஜினி நெல்சன் இயக்கத்தில் தலைவர் 169 படத்திற்காக இணையவுள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. அவரது பீஸ்ட் படம் ரிலீசுக்கு முன்னதாகவே இந்தப் படத்தின் அறிவிப்பை சன் பிக்சர்ஸ் மேற்கொண்டது. பீஸ்ட் படத்தின் ரிலீசை தொடர்ந்து இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

சொதப்பிய பீஸ்ட் படம்

சொதப்பிய பீஸ்ட் படம்

ஆனால் நெல்சனின் பீஸ்ட் படமும் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. மாறாக படத்தின் பல காட்சிகள் மற்றவர்களால் ட்ரோல் செய்யப்பட்டது. நெல்சனையும் அனைவரும் வைத்து செய்தனர். இதனால் ரஜினியை இயக்கும் அவரது வாய்ப்பு பறிபோகுமோ என்ற பேச்சும் அடிப்பட்டது.

ஜெயிலர் டைட்டில்

ஜெயிலர் டைட்டில்

ஆனால் தற்போது நெல்சன் திலீப்குமார் ரஜினியை இயக்குவது உறுதியாகியுள்ளது. தலைவர் 169 என்று தற்காலிகமாக வைக்கப்பட்ட ரஜினியின் படம் தற்போது ஜெயிலர் என்ற டைட்டிலுடன் விரைவில் சூட்டிங் துவங்கவுள்ளது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். நெல்சன் படத்தை இயக்குவதும் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வெற்றியின் கட்டாயம்

வெற்றியின் கட்டாயம்

தனது முந்தைய படங்களான கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை வெற்றிப் படங்களாக்கிய நெல்சன், மாஸ் காட்டவேண்டிய விஜய்யின் பீஸ்ட் படத்தில் சொதப்பிய நிலையில், தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தை கண்டிப்பாக வெற்றிப்படமாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

வேலைகளை துவங்கிய நெல்சன்

வேலைகளை துவங்கிய நெல்சன்

அவர் இந்தப் படத்தின் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகளை அவர் ஏற்கனவே துவக்கிவிட்டார். படத்தின் விவாதம் முடிந்துள்ளதாகவும் படத்திற்கான கதை, திரைக்கதையை எழுதும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளதாகவும் சமீபத்தில் அவரது நண்பரும் காமெடி நடிகருமான ரெடின் கிங்ஸ்லி தெரிவித்திருந்தார்.

வெற்றிக்கான வெறி

வெற்றிக்கான வெறி

மேலும் நெல்சன் வெற்றிக்கான வெறியுடன் உள்ளதாகவும் கண்டிப்பாக இந்தப் படம் வேற லெவலில் அமையும் என்றும் அவர் கூறியிருந்தார். இதனால் இந்தப் படம் கண்டிப்பாக சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். படத்திற்கான தலைப்பு ஜெயிலர் என்று உள்ளதால் சிறையில் ரஜினி சந்திக்கும் பிரச்சினைகள் உள்ளிட்டவற்றை படம் மையமாக கொண்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகமான காமெடி

அதிகமான காமெடி

முன்னதாக நெல்சன் படங்களில் காமெடி தூக்கலாக இருக்கும். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ஜெயிலர் பட அறிவிப்பில் ரத்தம் தோய்ந்த அரிவாளை முதல் பார்வை போஸ்டராக சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. மிகப்பெரிய ஹீரோவின் படத்தை மிஸ் செய்யக்கூடாது என்பதற்காக தன்னுடைய காமெடி களத்திலிருந்து வன்முறைக்கு நெல்சன் மாறியுள்ளாரா என கேள்வி எழுந்துள்ளது.

லோகேஷை பின்பற்றும் நெல்சன்

லோகேஷை பின்பற்றும் நெல்சன்

முன்னதாக விஜய் படத்தை மிஸ் செய்யக்கூடாது என்பதற்காக தான் மாஸ்டர் படத்தில் சமரசம் செய்துக் கொண்டதாக லோகேஷ் கூறியிருந்தார். இந்நிலையில் ஜெயிலர் படத்தில் தன்னை நிருபிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால் நெல்சன் வன்முறை கலாச்சாரத்தை கையில் எடுத்துள்ளாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பாதை மாறும் நெல்சன்

பாதை மாறும் நெல்சன்

பீஸ்ட் படத்தின் கலவையான விமர்சனங்களை அடுத்து, தலைவர் 169 படத்திலிருந்து நெல்சன் நீக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது வன்முறையை தூண்டும் வகையில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தன்னுடைய பாணியில் சிறப்பான படங்களை கொடுத்த நெல்சன், இந்தப் படத்தில் எப்படி கதையை கொண்டு செல்லப் போகிறார் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X