சிவகார்த்திகேயன் படத்தில்.. பிரபல ஹீரோயின் கஜோல் மகள் நடிக்கிறாரா? என்ன சொல்கிறார் இயக்குனர்?
சென்னை: சிவகார்த்திகேயன் படத்தில், பிரபல இந்தி நடிகை கஜோலின் மகள் நடிப்பதாக வந்துள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நயன்தாரா, யோகி பாபு, சரண்யா, ஆர்.எஸ்.சிவாஜி, 'நான் கடவுள்' ராஜேந்திரன் உட்பட பலர் நடித்த படம், கோலமாவு கோகிலா.
இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்திருந்தது. அனிருத் இசை அமைத்திருந்தார்.

கல்யாண வயசுதான்
சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்திருந்தார். 2018- ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் ஹீரோயின் நயன்தாராவின் நடிப்பு பேசப்பட்டது. புற்றுநோயால் பாதிக்கப்படும் தனது தாயின் சிகிச்சைக்காக போதைப் பொருள் கடத்தலில் நயன்தாரா ஈடுபடுவது போன்ற கதையை கொண்ட படம் இது. யோகிபாபுவும் சிறப்பாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் 'கல்யாண வயசுதான் வந்திடுச்சுடி' என்ற பாடல் ஹிட்டானது.

சிவகார்த்திகேயன்
படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கி இருந்தார். இதையடுத்து அவர் இயக்கும் படம், 'டாக்டர்'. இதில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். அவர் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இவர் கன்னடத்தில் ஒரு படத்திலும் தெலுங்கில் நானி ஜோடியாக, கேங்க் லீடர் படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படத்தின் கதை சென்னையிலும் கோவாவிலும் நடப்பது போல அமைக்கப்பட்டு இருக்கிறது.

நடிகை கஜோல் மகள்
ஆக்ஷன் காமெடி கதையை கொண்ட இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்தப் படத்துக்காக சமீபத்தில் வெளியிடப்பட்ட, 'செல்லம்மா' என்ற பாடல் டிரெண்டானது. யூடியூபில் இந்த பாடலை ஏராளமான ரசிகர்கள் கேட்டுள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தில் பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன், நடிகை கஜோல் தம்பதியின் மகள் நைசா தேவ்கன் (Nysa Devgn) நடிப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குனர் மறுப்பு
ஹீரோயினாக இல்லாமல், முக்கியமான கேரக்டர் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும் இந்தப் படத்தில் அவர் நடிப்பதற்கு கஜோலும் அஜய் தேவ்கனும் சம்மதித்துவிட்டதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது. இயக்குனர் நெல்சன் திலீப்குமாரிடம் இந்த தகவல் பற்றி கேட்டபோது மறுத்தார். 'டாக்டர் படத்தில் அவர் நடிக்கவில்லை. தவறான தகவல் என்றார். மேலும் அவர் கூறும்போது, படத்தின் ஷூட்டிங் இன்னும் பத்து, பதினைந்து நாள் மட்டுமே பாக்கி இருக்கிறது என்றார்.


Click it and Unblock the Notifications











