Don't Miss!
- News
கனமழை எச்சரிக்கை.. திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.. வருவாய் அலுவலர் அறிவிப்பு!
- Lifestyle
ஆண்களே! உங்க திருமண உறவை மகிழ்ச்சியாக வைத்திருக்க... நீங்க இந்த விஷயம் பண்ணா போதுமாம்...!
- Finance
பைஜூவில் 15% ஊழியர்கள் பணி நீக்கம்.. ஏன் தெரியுமா.. யாருக்கெல்லாம் பாதிப்பு..!
- Automobiles
முன்ன மாதிரியில்ல ஹோண்டா வாகனங்கள் மீது நம்பிக்கை இழக்கும் மக்கள்... கிடுகிடுவென சரியும் விற்பனை!
- Sports
ஹர்திக் கொடுத்த பலே ஐடியா.. சதத்திற்கு நீங்க தான் காரணம்.. ஹர்திக் குறித்து சுப்மன் கில் பேச்சு
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
துணிவு டிரைலர் வெளியானதும் டிரெண்டான நெல்சன்.. இப்போ அண்ணா செம ஹாப்பியா இருப்பாரு!
சென்னை: அஜித்தின் துணிவு டிரைலர் வெளியான நிலையில், விஜய் ரசிகர்கள் இயக்குநர் நெல்சன் ஹாஷ்டேக்கையும் டிரெண்ட் செய்து ஏகப்பட்ட ட்ரோல் மீம்களை போட்டு அஜித் ரசிகர்களை வெறுப்பேற்றி வருகின்றனர்.
இந்த ஆண்டு இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் போலவே துணிவு படத்தின் டிரைலர் உள்ளது என்றும் பீஸ்ட் பிளஸ் மணி ஹெய்ஸ்ட் படத்தின் காப்பி என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
இயக்குநர் நெல்சனை குறிப்பிட்டு பதிவிட்டுள்ள மீம்கள் சோஷியல் மீடியாவையே கலகலப்பாக மாற்றி உள்ளன. ஆண்டு இறுதியில் தரமான சம்பவம் இது என நெட்டிசன்கள் வித விதமாக வெளுத்து வாங்கி வருகின்றனர்.
யப்பா.. இது பீஸ்ட் படம்ப்பா.. அஜித்தின் துணிவு டிரைலரை துவைத்து எடுக்கும் விஜய் ரசிகர்கள்!

துணிவு டிரைலர் ட்ரோல்
நடிகர் அஜித்தின் வலிமை படம் வெளியாகி சொதப்பிய நிலையில், துணிவு படத்தின் பெரும் நம்பிக்கையை அஜித் ரசிகர்கள் வைத்துள்ளனர். வித்தியாசமாகவும் புது மாதிரியாகவும் துணிவு பட டிரைலர் காட்சிகள் இருக்கும் என எதிர்பார்த்தால் ஏற்கனவே பல படங்களில் பார்த்து புளித்துப் போன காட்சிகளின் கலவையாகவே டிரைலர் இருப்பது பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

டிரெண்டாகும் நெல்சன்
இந்த ஆண்டு நடிகர் விஜய்யை வைத்து இயக்குநர் நெல்சன் ஒரு தரமான சம்பவம் செய்தது சர்வதேச அளவில் ட்ரோல் மெட்டீரியல் ஆனது. இந்நிலையில், அதை சரிசமம் செய்யும் அளவுக்கு ஒரு சம்பத்துடன் இயக்குநர் ஹெச் வினோத் வரவிருக்கிறார் என விஜய் ரசிகர்கள் நெல்சன் ஹாஷ்டேக்கை ட்விட்டரில் டிரெண்ட் செய்து தெறிக்கவிட்டு வருகின்றனர்.

நெல்சன் ரியாக்ஷன்
துணிவு படத்தின் டிரைலர் வெளியான நிலையில், அதை பார்த்த விஜய் ரசிகர்கள், இந்நேரம் இந்த டிரைலரை பார்த்து விட்டு இயக்குநர் நெல்சன் இப்படித்தான் ரியாக்ஷன் கொடுத்திருப்பார் என ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் உதயநிதி ஸ்டாலின் கால் மேல் கால் போட்டு உட்காரும் காட்சிகளை பதிவிட்டு வருகின்றனர்.

இரண்டும் ஒன்று தான்
இயக்குநர் நெல்சன் மற்றும் இயக்குநர் ஹெச். வினோத் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்றும் இருவருமே ஒரே ஜெராக்ஸ் தான் என மன்மதன் படத்தில் டபுள் ஆக்ஷனில் சிம்பு நடித்துள்ள காட்சியை பதிவிட்டு கலாய்த்து வருகின்றனர்.

இப்படித்தான் சிரிப்பார்
மகான் படத்தின் வில்லன் சிரிக்கும் காட்சியை வீடியோ க்ளிப்பாக போட்டு இந்நேரம் இயக்குநர் நெல்சன் இப்படித்தான் சந்தோஷப்பட்டு சிரித்துக் கொண்டிருப்பார் என துணிவு டிரைலரை ரக ரகமாக கலாய்த்து வருகின்றனர்.

சபாஷ் சரியான போட்டி
இப்படித்தான் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களை இயக்குநர்கள் வச்சு செய்யணும் என ஹாஷ்டேக் நெல்சனை வேறலெவலில் டிரெண்ட் செய்து வருகின்றனர். அடுத்து வாரிசு படத்தின் டிரைலர் வந்தால் எந்த படத்தின் காப்பி என அஜித் ரசிகர்கள் எப்படி கலாய்ப்பாங்கன்னு நினைச்சி பார்த்தா தான் சிரிப்பை அடக்க முடியல என நெட்டிசன்கள் தாறுமாறு செய்து வருகின்றனர்.