Nelson memes: யார் பெற்ற மகனோ.. ரஜினிக்கு கம்பேக் கொடுத்துட்ட நெல்சா.. கும்பிடு போடும் ரசிகர்கள்!
சென்னை: கடந்த 10 ஆண்டுகளில் வெளியான ரஜினிகாந்தின் படத்திலேயே ஜெயிலர் படம் மரண சம்பவம் என இயக்குநர் நெல்சனை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
லுக், ஸ்டைல், ஸ்வாக், பஞ்ச் வசனம், ஆக்ஷன் சீன்கள், மாஸ் எலிவேஷன் என சூப்பர்ஸ்டார் ரஜினியை ஃபிரேம் பை ஃபிரேம் செதுக்கி சூப்பர் கம்பேக் கொடுத்துட்ட நெல்சா என ரஜினிகாந்த் ரசிகர்கள் நெல்சனை சோஷியல் மீடியாவில் மீம் போட்டுக் கொண்டாடி வருகின்றனர்.

அதிலும் விஜய்யின் கத்தி படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை வைத்து வெளியாகி உள்ள வீடியோ மீமை போட்டு தெறிக்க விட்டு வருகின்றனர்.
கம்பேக் கொடுத்த நெல்சன்: நல்ல இயக்குநர்கள் ஃபெயில் ஆகமாட்டாங்க, அவங்க எடுத்த சப்ஜெக்ட் ஃபெயில் ஆகும் என ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலேயே இயக்குநர் நெல்சன் மீது முழு நம்பிக்கை வைத்து ரஜினிகாந்த் பேசியிருந்தார். படம் வெளியான நிலையில், ரஜினியின் நம்பிக்கையை காப்பாற்றி இயக்குநர் நெல்சன் கம்பேக் கொடுத்து விட்டார்.

விக்ரமை தூக்கிப் போட்ட நெல்சன்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி 420 கோடி வசூல் ஈட்டிய கமல்ஹாசனின் விக்ரம் படத்தையே நெல்சன் தூக்கிப் போட்டு விட்டார் என்றும், அதை விட அதிகமான பாக்ஸ் ஆபிஸ் வேட்டையை ஜெயிலர் நடத்தும் என ரசிகர்க்ள் மீம் போட்டு அலப்பறையை கிளப்பி வருகின்றனர்.

ரசிகர்களை திருப்திப்படுத்திய நெல்சன்: சூப்பர்ஸ்டார் படத்தில் என்ன எதிர்பார்த்து ரசிகர்கள் சென்றார்களோ அதை டபுள் மடங்காக கொடுத்து இயக்குநர் நெல்சன் மாஸ் காட்டி விட்டார் என பாராட்டி சார்பட்டா பரம்பரை வீடியோ மீம்களை வெளியிட்டு நெல்சனை கொண்டாடி வருகின்றனர்.

யார் பெற்ற மகனோ: கத்தி படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை வைத்து விஜய் முகத்தில் ரஜினி முகத்தை வைத்தும் இன்னொரு விஜய்க்கு பதில் நெல்சன் முகத்தை வைத்தும் எடிட் செய்யப்பட்ட யார் பெற்ற மகனோ பாடல் வீடியோ மீம் வேறலெவலில் டிரெண்டாகி வருகிறது.

பாவம் விஜய்: எல்லாவற்றுக்கும் மேல், ஒரு கல் கண்ணாடி படத்தில் உதயநிதி சத்யம் தியேட்டரில் சந்தோஷத்தில் ஆடி வரும் காட்சியை நெல்சன் ஜெயிலர் படத்தின் வெற்றியை கொண்டாடுவது போலவும், பாவமான பார்த்தாவாக பீஸ்ட் விஜய் மாறி நெல்சனை பார்க்கும் காட்சிகள் ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளன. அதே நேரத்தில் ஏகப்பட்ட விஜய் ரசிகர்களும் நெல்சனின் கம்பேக் வெற்றியை நல்ல மனதுடன் வரவேற்று வருவதும் சிறப்பு.


Click it and Unblock the Notifications











